தை அமாவாசை 2024 : இந்த 3 விஷயங்களை கட்டாயம் செய்யுங்கள்..!
அமாவாசை அன்று செய்ய வேண்டி 3 முக்கிய விஷயங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். தை அமாவாசை என்பது இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர்.
ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியன. தை அமாவாசை அன்று, ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து திதி செய்வர்.
ஆனால் இந்த ஆண்டு 2 நாட்காளுக்கு அமாவாசை திதி இருப்பதால் என்றைக்கு படையல் வைப்பது என்பதில் சிரிய குழப்பம் எழுந்துள்ளது. அதனால் என்றைக்கு நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். அதற்கான காரணம் என்ன? ஏன்? என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
அதாவது, தை அமாவாசை என்பது முன்னோர்களுக்காக இருக்கும் விரதமாகும். இந்த வருடம் தை அமாவாசை பிப்ரவரி 09 ஆம் தேதியும் பிப்ரவரி 10ஆம் தேதியும் வருகிறது. அதனால் என்றைக்கு நம் முன்னோர்களுக்கு படையல் வைக்க வேண்டும் என்றால், பிப்ரவரி 09 ஆம் தேதிதான் படையல் வைத்து விரதம் அனுஷ்டிக்க வேண்டும். பொதுவாக சூரியன் உதயமாகும் நேரம் மற்றும் அஷ்தமனமாகும் நேரம் என்று ஒன்று உள்ளது. இந்த நேரத்தை 5 காலமாக பிரிக்கலாம்.
அந்த வகையில் பிப்ரவரி 09ஆம் தேதிதான் நமக்கு அமாவாசை அமைந்துள்ளது. அடுத்த நாள் அபரானக்காலத்தில் திதி அமையவில்லை ஆகவேதான் இந்த வருடம் தை அமாவாசையை குழப்பம் இல்லாமல் பிப்ரவரி 09ஆம் தேதியில் அனுஷ்டிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அபரான்ன காலம் என்றால் என்ன?
பகல் பொழுதை ஐந்து பாகமாக பிரித்து அதில் நான்காம் பாகத்தில் உள்ள கால அளவே அபரான்னம் எனப்படும் அபரான்னkகாலம் ஆகும். இது பிதுர்களுக்கு உகந்த காலமாகும். சிராத்த திதி இரண்டு நாட்களிலும் இருந்தால் அபரான்ன காலத்தில் திதி அதிகமாக உள்ள அன்றுதான் சிராத்த திதி கடைபிடிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
செய்ய வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள்
1. அன்றைய தினம் உணவை யாராவது 2 பேருக்கு தானமாக அளித்தல் நல்லது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், சில காரணங்களுக்காக தர்பணம் கொடுக்க முடியாதவர்கள் யாருகாவது உணவை தானமாக கொடுப்பது சிறப்பு.
2. அமாவாசை அன்று மாலையில் தவறாமல் விளக்கேற்றுவது நல்லது. அப்படி விளகேற்றும் போது நாராயணனை வணங்கி உங்கள் முன்னோர்களுக்காக பிராத்தனை செய்வது நல்லது…
3. பசுவிற்கு உணவளித்தல்
பலன்கள்
அமாவாசை விரதத்தை இப்படி கடைபிடித்தால் குடும்பத்தில் பிரச்னைகள் வராது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முன்னோர்களின் அருளோடு இறை அருளும் நமக்கு கிடைக்கும்.