இவ்ளோ சின்ன வயசுல இப்படி ஒரு காஸ்ட்லியான காரா! ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பாக்க வெச்சுட்டாங்க!
இந்த கால இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அனைவரையும் நாம் தவறாக சொல்லி விட முடியாது. ஒரு சிலர் மிகவும் இளம் வயதிலேயே புகழின் உச்சத்திற்கு சென்று விடுகின்றனர். அவர்களுக்குள் இருக்கும் திறமைகள்தான் இதற்கு மிக முக்கியமான காரணம்.
அப்படி மிகவும் இளம் வயதிலேயே புகழின் உச்சத்திற்கு சென்றவர்தான், அல்விரா மிர் (Alvira Mir). 22 வயது மட்டுமே நிரம்பிய பாடகரான (Singer), ஹிந்தி (Hindi) மற்றும் குஜராத்தி (Gujarati) மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். அல்விரா மிர் பற்றி நாங்கள் தற்போது இங்கே பேசி கொண்டிருப்பதற்கு ஒரு காரணம் உள்ளது.
ஆம், இவர் புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகும். இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்தது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் ஆரம்ப விலை 10.70 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதில் எந்த வேரியண்ட்டை அல்விரா மிர் வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை. செயல்திறனை பொறுத்தவரையில் இந்த காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில், 1.5 லிட்டர் K15C மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் இ-சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் அதிநவீன வசதிகளுக்கும் சற்றும் பஞ்சமில்லை. பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், கனெக்டட் கார் தொழில்நுட்பம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்ற பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த ஒரு தயாரிப்பாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) போன்ற கார்களுடன், இது போட்டியிட்டு வருகிறது.