டெஸ்லாவுக்கு இப்படி ஒரு மோசமான நிலையா… அவ்ளோ பெரிய நாட்டுல ஒரே ஒரு யூனிட்தான் விற்பனையாகிருக்கா!
உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் டெஸ்லா (Tesla)-வும் ஒன்றாகும். முன்னணி நிறுவனங்களான டொயோட்டா, பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களுக்கே மிகப் பெரிய அளவில் விற்பனையில் இந்த நிறுவனம் போட்டியை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய மாபெரும் நிறுவனமே ஓர் நாட்டில் சென்ற ஜனவரி மாதத்தில் ஒரே ஒரு யூனிட் காரை மட்டுமே விற்பனைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக அளவில் கார் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கும் இந்த நிறுவனத்திற்கு இந்த அளவிற்கு மோசமான சந்தையாக அமைந்திருக்கும் அந்த நாடு எது? மேலும் ஏன் அங்கு இந்த அளவிற்கு மோசமாக டெஸ்லா கார்கள் விற்பனையாகி இருக்கின்றன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
சென்ற ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வாகனங்கள் அதிக அளவில் புக்கிங்கை பெற்றிருப்பதாக இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் சிலர் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் உலக புகழ்பெற்ற வாகன உற்பத்தியாளரான டெஸ்லா, அவர்களின் தயாரிப்பிற்கு குறிப்பிட்ட ஓர் நாட்டில் பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை என குமுறிக் கொண்டிருக்கின்றது.
விற்பனையில் மாபெரும் பின்னடைவை அது சந்தித்து இருப்பதாகவும் கூறியிருக்கின்றது. தெற்கு கொரியாவிலேயே டெஸ்லா நிறுவனம் மிகப் பெரிய விற்பனைச் சரிவைச் சந்தித்து இருக்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், மிக முக்கியமான காரணமாக அந்த கார் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதே இருக்கின்றது.
டெஸ்லா நிறுவனத்தின் மாபெரும் கார் உற்பத்தி ஆலை அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சீனாவிலும் உள்ளது. இங்கிருந்தே உலக நாடுகள் பலவற்றிற்கு அது கார்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் ஒன்றாக தென்கொரியாவும் இருக்கின்றது.
இந்த காரணத்தினாலேயே, அதாவது, சீனாவில் இருந்து விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்ற காரணத்தினாலேயே விற்பனை மிக மோசமான அளவிற்கு மோசமாக சரிந்திருக்கின்றது. அந்நாட்டில் அதிகம் விற்பனையாகும் டெஸ்லா கார் மாடலான மாடல் ஒய்-கூட பெரிய அளவில் விற்பனையாகவில்லை என தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அந்த நிறுவனம் மட்டுமல்ல ஒட்டுமொத்த வாகன உலகமும் அதிர்ச்சியில் மூழ்கி இருக்கின்றது. மேக மோசமான நிலை காரணமாக சீனாவை விட்டே வெளியேறும் நிலை டெஸ்லாவிற்கு ஏற்பட்டு இருக்கின்றது (ஆனால் இது இப்போது வெளியேறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை). சீன தயாரிப்பு கார்களை தென் கொரியர்கள் வாங்க தயக்கம் காட்டுவதே இந்த நிலைக்கு காரணம் ஒரு பக்கம் கூறப்படுகின்றது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களில் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுவே தொன் கொரியர்கள் டெஸ்லாவை தவிர்க்க காரணம். அதேவேளையில் டெஸ்லா மட்டுமல்ல ஒட்டுமொத்த மின்சார வாகன விற்பனையும் தென் கொரியாவில் குறைந்திருப்பதாக புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன.
சியோலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கேரிஸ்யூ மற்றும் கொரிய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின் அடிப்படையில் கொரியாவில் மின்சார வாகன விற்பனை டிசம்பரைக் காட்டிலும் ஜனவரியில் 80 சதவீதம் குறைந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதற்கு காரணம் பணவீக்கம் மற்றும் தென் கொரியாவின் அதிக வட்டி விகிதமே காரணமே என கூறப்படுகின்றது.
இதனாலேயே 80 சதவீதம் எனும் மாபெரும் அளவிற்கு மின்சார வாகனங்கள் அந்நாட்டில் விற்பனைக்கு குறைந்திருக்கின்றது. இருப்பினும், சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நல்ல விற்பனையைப் பெற்ற டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒற்றை யூனிட்டை மட்டுமே விற்பனைச் செய்திருக்கின்றது என்பது மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
இந்த நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு பின்னால், அவை சீன தயாரிப்பு என்பதே காரணம் என கூறப்படுகின்றது. தென் கொரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற கார் மாடலாக டெஸ்லாவின் மாடல் ஒய்-யே இருக்கின்றது. இதுவே ஒரே ஒரு யூனிட் மட்டுமே சென்ற ஜனவரியில் விற்பனையாகி இருக்கின்றது.