எம்ஜி எடுத்த அதிரடி முடிவு! இந்தியாவின் குறைந்த விலை இவியாக மாறிய கோமெட் இவி!
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது கோமெட் என்ற இவி காரின் விலையை ரூபாய் 1.40 லட்சம் வரை குறைத்துள்ளது. இந்தியாவில் இந்த காரின் விற்பனையை அதிகரிக்க தற்போது எம்ஜி நிறுவனம் இந்த விலை குறைப்பு முயற்சியை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்த காரின் விற்பனை பல மடங்கு அதிகமாகும் என நிறுவனம் கணித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
எம்ஜி நிறுவனம் இந்தியாவில் காலடி தடம் பதித்து ஒரு சில ஆண்டுகளிலேயே மிகச்சிறந்த நிறுவனமாக மாறி உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் தரமான தயாரிப்புகளாக இருப்பதால் மக்கள் பலரின் நிறுவனத்தின் கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் எம்ஜி மோட்டார் நிறுவனத்திற்கு என்ற ஒரு நல்ல பெயர் இருக்கிறது. இந்நிலையில் எம்ஜ நிறுவனம் தனது வாகன அணிவகுப்பில் எலெக்ட்ரிக் கார்களை உட்புகுத்தி உள்ளது.
ஏற்கனவே எம்ஜி இசட் எஸ் என்ற பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வந்த நிலையில் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் என்ற காரை முதன்முறையாக நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. அப்பொழுது முதல் இந்த காருக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய டிமாண்ட் ஏற்பட்டது பலர் இந்த காரை விரும்பி வாங்க நினைத்தார்கள்.
ஆனால் எம்ஜி நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை எடுபடவில்லை. எம்ஜி நிறுவனம் இந்த கார் இந்தியாவில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்த்தது. ஆனால் இது அந்த அளவிற்கு விற்பனையாகவில்லை. இதற்கு முக்கியமான காரணம் குறித்து எம்ஜி நிறுவனம் ஆய்வு செய்தபோது இதன் விலை மிக முக்கியமான காரணமாக இருப்பதாக கருதப்பட்டது.
இந்திய மக்கள் தரமான தயாரிப்பாக இருந்தாலும் அவர்களால் வாங்க முடியாத அளவு அதிகமான விலையில் இருந்தால் அதை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். அதனால் எம்ஜி நிறுவனம் தனது கோமெட் இவி காரின் விலையை குறைக்க முடிவு செய்து தற்போது அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எம்ஜி கோமெட் இவி காரின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது கோமெட் இவி காரின் விலையை ரூபாய் 99 ஆயிரம் முதல் ரூபாய் 1.40 லட்சம் வரை குறைத்துள்ளது. இதன் மூலம் தற்போது எம்ஜி கோமெட் இவி கார் ரூபாய் 6.9 லட்சம் முதல் ரூபாய் 8.58 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இனி நாம் ஒவ்வொரு வேரியன்ட் வாரியான விலை விபரங்கள் எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது என்ற அனைத்து தகவல்களையும் காணலாம் வாருங்கள்.
எம்ஜி கோமெட் இவியின் என்ட்ரி லெவல் பேஸ் வேரியன்ட் காருக்கு ரூபாய் 99 ஆயிரம் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூபாய் 7.98 லட்சமாக இருந்த இந்த காரின் விலை தற்போது 6.99 லட்சமாக மாறி உள்ளது. அடுத்ததாக மிட் வேரியன்ட்டில் பிளே மட்டும் பிளஸ் வேரியண்ட் கார்களுக்கு ரூபாய் 1.40 லட்சம் வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதில் பிளே வேரியன்ட் கார் ரூபாய் 9.28 லட்சமாக விற்பனையாகி வந்தது. தற்போது ரூ7.88 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே போல டாப் வேரியன்டான பிளஸ் வேரியன்ட் கார் ரூ 9.98 லட்சமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ 8.58 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் டாடா டியாகோ இவி காரின் பேஸ் வேரியன்டை விட கோமெட் இவி காரின் டாப் வேரியன்டின் விலை குறைவாக தான் இருக்கிறது.
தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. வருங்காலங்களில் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் அதிகமாக விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களில் மார்க்கெட் தங்கள் நிலையை பெரிதாக்கிக்கொள்ள பல்வேறு நிறுவனங்களும் முயற்சி செய்து வருகிறது. இப்படியாக எம்ஜி நிறுவனமும் களத்தில் இறங்கி உள்ளது.