மும்பை இந்தியன்ஸ் அணியை தாக்கி பும்ரா பதிவு.. யாருமே ஆதரவு அளிக்கவில்லை என கடும் தாக்கு
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பவுலராக வந்துள்ள பும்ரா, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியை மறைமுகமாக தாக்கி பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா 9 விக்கெட்டுகளை மொத்தமாக கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தும் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்காமல்,பும்ராவுக்கு கிடைக்கப்பெற்றது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மீது ரோகித் சர்மாவை போல் பும்ராவும் அதிருப்தியில் இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பிறகு தாம் தான் வருவேன் என்று பும்ரா மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார். இந்த நிலையில் ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை அழைத்து வந்து கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணி ஆக்கி இருக்கிறது.
இது மும்பை அணி வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் அவருடைய மனைவி வெளிப்படையாக மும்பை இந்தியன்ஸ் அணியை விமர்சித்து வருகிறார்கள். இதேபோன்று சூரியகுமார் யாதவும் மும்பை இந்தியன்ஸ் அணி முடிவுக்கு மறைமுகமாக பல எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவிட்டு வருகிறார்.
இதேபோன்று பும்ராவும் தன்னுடைய அதிருப்தியை அடிக்கடி காட்டி வந்தார். இந்த நிலையில் பும்ரா ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசை பவுலர்களுக்கான பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கொண்டாடி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று போட்டு இருந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பும்ரா தனது instagram பக்கத்தில் ஒரு மீம் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் நமக்கு ஆதரவு கொடுக்க ஒருவர் இருவரை தவிர வேறு யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால் நாம் ஏதேனும் சாதனை செய்தால் நமக்கு வாழ்த்துக்கள் சொல்ல ஆயிரக்கணக்கில் வருவார்கள் என்று இருக்கும் புகைப்படத்தை பும்ரா பதிவிட்டு இருக்கிறார்.
இது மும்பை இந்தியன்ஸ் அணியை தாக்கிய அவர் போட்டு உள்ளார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி பும்ராவுக்கு எந்தவித ஆதரவும் கேப்டன்ஷிப் விவாகரத்தில் வழங்காத நிலையில் அவர் இந்த கோபத்தை வெளிப்படுத்தி இருப்பதாக தெரிகிறது. மேலும் பும்ரா இந்திய அணியில் உள்ள பயிற்சியாளர்களை குறி வைத்து இவ்வாறு பதிவிட்டு இருக்கிறாரா என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.