முதல் முறையாக மனைவியின் முகத்தை காட்டிய இர்பான் பதான்-யூசுப் பதானை காட்டி திட்டிய கலாச்சார காவலர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தற்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார். இர்பான் பதான், இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டி, 120 ஒரு நாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 31 விக்கெட்டுகளை இந்தியாவுக்காக இர்பான் பதான் கைப்பற்றி இருக்கிறார். இதைப் போன்று பேட்டிங்கில் 2500 ரன்கள் இர்பான் பதான் அடித்திருக்கிறார்.
இந்த நிலையில் இர்பான் பதான், தற்போது கிரிக்கெட் விமர்சகராக பணிபுரிந்து வருகிறார். இர்ஃபான் பதானுக்கு கடந்த எட்டு ஆண்டுக்கு முன்பு சாயிப் பாக் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இர்ஃபான் பதான் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவதால் அவருடைய மனைவி பெரும்பாலும் புர்கா அணிந்துதான் செல்வார்.
இர்பான் பதானுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த எட்டு ஆண்டுகளில் இர்பான் பதான் ஒரு முறை கூட தன்னுடைய மனைவியின் முகத்தை வெளியிட்டது கிடையாது. இந்த நிலையில் தன்னுடைய எட்டாவது திருமண நாளை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் முதல்முறையாக தன்னுடைய மனைவியின் முகத்தை இர்பான் பதான் பதிவிட்டு இருந்தார்.
அதில் தனக்கு எல்லாமாகவும் ஒருவரால் இருக்க முடியும் என்றால் அது நீதான். என்னுடைய காமெடியன், எனக்கு பிரச்சனை தருபவர், என்னுடைய உத்வேகத்தை கூட்டுபவர், என்னுடைய தோழி, என்னுடைய குழந்தைகளின் தாய் என்று எல்லாமும் நீயா தான் இருக்கின்றாய். இந்த அழகான பயணத்தில் நீ எனக்கு மனைவியாக கிடைத்ததை நினைத்து சந்தோஷம் கொள்கிறேன் என்று இர்பான் பதான் தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இதற்கு கலாச்சார காவலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இஸ்லாமியராக இருக்கும் நீங்கள் எப்படி உங்களுடைய மனைவியின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் உங்களுடைய சகோதரர் யூசுப் பதான் ஒரு முறையாவது தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் இப்படி வெளியிட்டு இருப்பாரா என்று அவர்கள் கேள்வி எழுப்பு உள்ளனர்.
இத்தனை நாள் புர்காவுடன் பல புகைப்படங்களை வெளியிடும்போது எவ்வாறு இர்ஃபான் பதான் இப்படி செய்யலாம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பதானுக்கு ஆதரவாக பலரும் களமிறங்கியுள்ளனர்.ஆடை சுதந்திரம் என்பது தனிப்பட்ட நபரை பொறுத்தது என்றும், ஒருவர் புர்கா போடுவதும் போடாமல் விடுவதும் அவர்களுடைய விருப்பம் என்றும் அதனை கணவனே கேள்வி கேட்க முடியாது என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.