RBI அறிவிப்பின் எதிரொலி.. சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு.. என்ன நடக்குது..?!

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று 2024 ஆம் நிதியாண்டுக்கான கடைசி மற்றும் 2024 ஆம் ஆண்டின் முதல் இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டார். சந்தை கணிப்புகளைப் போலவே 6வது முறையாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ரெப்போ விகிதம் 6.5 சதவீதம் அளவீட்டில் அடுத்த 2 மாதங்களுக்குத் தொடரும் எனச் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் தடாலடியாக 700 புள்ளிகள் வரையில் சரிந்தது, இது மட்டும் அல்லாமல் பல வங்கிகள் தனது வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளதால் சாமானிய மக்கள் முதல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வரையில் அதிர்ச்சியில் உள்ளனர்.

இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து உயர்வுடன் இருந்த வேளையில் ஆர்பிஐ முடிவுகள் வெளியான அடுத்த சில நொடியில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுக்கப்பட்டது.

பட்ஜெட் அறிவிப்பால் பத்திர சந்தைக்கு மிகவும் சாதகமாகச் சூழ்நிலை உருவாகியிருந்தாலும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் ஆர்பிஐ நாணய கொள்கை மூலம் சாதகமான சூழ்நிலை உருவாகும் எனக் கணிக்கப்பட்டது.

ஆனால் 6வது முறையாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ரெப்போ விகிதம் 6.5 சதவீதம் அளவீட்டில் அடுத்த 2 மாதங்களுக்குத் தொடரும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.

இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் துறைவாரியான குறியீட்டில் வங்கி, ஆட்டோமொபைல், நிதியியல் சேவைகள், எப்எம்சிஜி ஆகிய 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதேபோல் ஆர்பிஐ வங்கி கடனிலும் புதிய மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது, இதன் வாயிலாகவே இந்தச் சரிவு பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் 6வது முறையாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ரெப்போ விகிதம் 6.5 சதவீதம் அளவீட்டில் அடுத்த 2 மாதங்களுக்குத் தொடரும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 72,473.42 புள்ளிகளில் துவக்கிய வேளையில் ஆர்பிஐ முடிவுக்கு முன்பு 72,473.42 புள்ளிகள் என்ற அளவுக்கு உயர்ந்தது. ஆனால் 10.15-க்கு ஆர்பிஐ நாணய கொள்கை முடிவுகள் வெளியானது மூலம் 71,405.38 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.

இதேபோல் நிஃப்டி குறியீடு 22,009.65 புள்ளிகளுக்குத் துவங்கி, 21,709.55 புள்ளிகள் என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. தற்போது 164.30 புள்ளிகள் குறைந்து 21,766.20 புள்ளிகளை எட்டியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *