சாட்டை துரைமுருகனிடம் என்ஐஏ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை..!
முன்னாள் நிர்வாகியாக இருந்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பொறியாளர் பாலாஜி(33) ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில், ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 8 சிம் மெமரி கார்டுகள், 4 பென் டிரைவ்கள், தடை செய்யப்பட்ட அமைப்பாக விடுதலை புலிகளின் மற்றும் அதன் தலைவரான பிரபாகரன் தொடர்பான ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் சோதனையில் கிடைத்த ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க கடந்த வாரம் என்ஐஏ சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 6 பேருக்கு சம்மன் அனுப்பினர். அந்த சம்மனை தொடர்ந்து சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன் ஆகியோர் இன்று காலை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ மண்டல அலுவலகத்தில் ஆஜராகினார். அப்போது சாட்டை துரைமுருகனை என்ஐஏ அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று, அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களை வைத்து, சட்ட விரோத நிதி பெற்றது உண்மையா? பெற்ற நிதியை அதற்காக பயன்படுத்தப்பட்டது? நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானக்கு நிதி பெற்ற விவரம் தெரியுமா? வெடி பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தியுக்கு உங்களுக்கு என்ன தொடர்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் என்ஐஏ அதிகாரிகள் கேட்டனர். அதற்கு சாட்டை துரைமுருகன் அளித்த பதிலை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
மேலும், இசை மதிவாணனிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரிடம் சட்டவிரோத நிதி பெற்றது குறித்தும், அதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பிறகு தான் வெளிநாடுகளில் இருந்து எத்தனை கோடி நிதி பெற்றப்பட்டது. அந்த நிதி எதற்காக பயன்படுத்தப்பட்டது குறித்து முழு விபரங்கள் தெரியவரும் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.