வெந்நீரில் குளித்தால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறையுமா..? ஆய்வில் வெளியான அதிர்ச்சி..!

தற்போதைய குளிருக்கு வெந்நீரில் குளிப்பது நமக்கு ஆனந்தத்தை கொடுக்கும். மேலும் வெந்நீரில் குளித்தால் உடல் வலிகளில் இருந்து விடுதலை கிடைக்கும். வெந்நீரில் குளித்துவிட்டு வந்தால் உடலும், உள்ளமும் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருப்பதை நீங்கள் உணர முடியும்.

இவ்வாறு வெந்நீரின் பலன்கள் பாசிட்டிவ் அடிப்படையில் அமைந்தாலும், ஆண்கள் இதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் வெந்நீரில் குளிக்கும்போது ஆண்களின் உயிரணு திறன் பாதிக்கப்படும் என்றும், அதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் என்றும் கூறப்படுகிறது.

பாதிப்பு ஏற்படுமா?

ஆண்களுக்கான விதைப்பைகள் உடலுக்கு வெளியே அமைந்துள்ளன. நம் ஒட்டுமொத்த உடல் வெப்பத்தைக் காட்டிலும் இந்த விதைப்பை அமைந்துள்ள இடத்தில் உஷ்ணத்தின் அளவு 4 டிகிரி குறைவாக இருக்க வேண்டும். விதைப்பை இயக்கம் சிறப்பானதாக இருக்கவும், விந்தணு உற்பத்தி நடைபெறவும் உஷ்ணம் குறைவாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

உடல் வெப்பத்தை விட, விதைப்பை வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் உயிரணு மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி பாதிக்கப்படும் என்று ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெந்நீர் குளியல் உள்பட இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

உஷ்ணம் அதிகரிப்பதால் விதைப்பையில் உயிரணு உற்பத்தி எண்ணிக்கை குறையத் தொடங்கும் மற்றும் அதன் நகர்வு வேகமும் குறையும். அதேபோல விந்தணுக்களின் அளவு மற்றும் வடிவம் போன்றவையும் பாதிக்கப்படும். இதனால் விந்தணு விறுவிறுப்பாக நகராது மற்றும் பெண்களின் கருமுட்டையுடன் இணைந்து கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும்.

நீண்ட காலத்திற்கு வெந்நீரில் குளித்துக் கொண்டிருந்தால் விதைப்பை பகுதியில் நோய் தொற்று ஏற்படலாம் மற்றும் அதன் காரணமாகவும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.

உயிரணுக்களை தரமானதாக வைத்திருக்க ஆலோசனைகள் :

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், ஆண்களின் கருத்தரித்தல் திறன் மேம்படுவதற்கும் நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் அவசியம் ஆகும். இது பெண்களுக்கும் பொருந்தும். தினசரி குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.

இனப்பெருக்க நலன் குறித்து மனைவியுடன் வெளிப்படையாக உரையாடுவது அவசியம். அதேபோல அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை கைவிட வேண்டும். அவை உயிரணு உற்பத்தியை பாதிக்கும்.

நீரிழிவு, ஹைப்பர்டென்சன், உடல் பருமன் போன்ற காரணங்களால் விந்தணு திறன் பாதிக்கப்படும். ஆகவே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்ள வேண்டும்.

நீண்ட நேரம் ஸ்மார்ஃபோன் பார்த்துக் கொண்டிருப்பதால் உடலில் மெலடோனின் உற்பத்தி பாதிக்கப்படும். நம்முடைய உயிரணு உற்பத்திக்கும் இந்த மெலடோனின் உற்பத்திக்கும் தொடர்பு உண்டு. ஆகவே டிஜிட்டல் சாதனங்களை அதிக நேரம் உபயோகிக்க கூடாது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *