அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல்… கர்நாடகாவில் மேலும் இருவருக்கு பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு காய்ச்சலைத் தடுக்க அம்மாநில அரசு தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குரங்கு காய்ச்சல் என்று அழைக்கப்படும் கியாசனூர் ஃபாரஸ்ட் டிசீஸ் கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக காணப்படுகிறது. விலங்குகளின் உடல்களில் ஒட்டி வாழும் ஒட்டுண்ணிகள் கடிப்பதால் இந்த நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
தற்போது கர்நாடகாவில், உத்தர கன்னடா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில், குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஆவேரி, உத்தர கர்நாடகா, சிமோகா, சிக்கமங்களூர் மாவட்டங்களில் 170 பேருக்கு குரங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், உத்தர கர்நாடகாவில் ஒருவருக்கும், சிக்கமங்களூரில் ஒருவருக்கும் என 2 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இ
ந்த நோய்க்கு இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர். உத்தர கர்நாடகா, ஷிமோகா, சிக்கு மங்களூர் மாவட்டங்களில் குரங்கு தெற்று அதிகரித்து வரும் நிலையில் நோயை கட்டுப்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து தீவீரம் காட்டி வருகிறது.