நான் திரும்ப வரேன்.. மீடியா முன்பு சீமான் மானத்தை வாங்குறேன்: நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ
நான் திரும்ப சென்னை வந்து தமிழ்நாடு மீடியா முன்பு சீமான் மானத்தை வாங்குறேன் என்று நடிகை விஜயலட்சுமி பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீமான் – விஜயலட்சுமி விவகாரம்
சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் என்றும், என்னை அவர் பயன்படுத்திக் கொண்டு கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
பின்னர், சீமான் தரப்பு பேசியதை தொடர்ந்து அந்த வழக்கை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். இதனையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் தான் வாபஸ் பெற்றதாக அவர் கூறினார். ஆனால், மீண்டும் அவர் என்னை ஏமாற்றி விட்டார் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்ததன் படி பொலிஸார் விசாரணை நடத்தினர். ஆனால், திடீரென வழக்கை வாபஸ் பெற்ற விஜயலட்சுமி கர்நாடகா செல்வதாக கூறினார். அங்கு சென்றும் சீமானுக்கு எதிராக பல வீடியோக்களை வெளியிட்டார்.
வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி சீமான் பற்றி பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், “சீமான் தனது செல்வாக்கின் மூலம் வழக்கை மறைத்து உத்தமர் போல பேசுகிறார். . இப்போது என்ஐஏ-விடம் என்ன விளக்கம் கொடுத்துள்ளார்?
"திரும்ப சென்னை வரப்போறேன்…" pic.twitter.com/mWwgFtqdkt
— U2 Brutus (@U2Brutus_off) February 7, 2024
நான் கொடுத்த வழக்கு அப்படியே உள்ளது. விசாரணைக்கு வரும்போது தான் என் போனை கொடுக்க முடியும் என்கிறார்கள். ஆனால், சீமான் தரப்பில் வழக்கை எடுக்க மாட்டார்கள் என்று கூறுகிறார்கள். 14 வருடங்களுக்கு முன்பு போட்ட வழக்கை எடுக்க வேண்டும் என நான் ஒவ்வொருவரிடமும் பிச்சை எடுக்க வேண்டுமா?
நான் திரும்பவும் சென்னை வர்றேன், தமிழ்நாடு மீடியா முன்பு சீமான் பற்றி எல்லாத்தையும் சொல்கிறேன்.அவர் மானத்தை வாங்குறேன். மாநில அரசும் காவல்துறையும் சீமானை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.