நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்து பிரித்தானியா கரிசனை
இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் பிரித்தானியா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.
சர்வதேச இணைய நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த சட்டம் தொடர்பில் தங்களது கரிசனையை வெளியிட்டிருந்தனர்.
பொருளாதாரப் பாதிப்புக்கள்
இந்நிலையில் நிகழ்நிலை காப்புச் சட்ட நடைமுறையாக்கம் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி ரிவிலியன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய பொருளாதாரப் பாதிப்புக்கள் மற்றும் கருத்துச் சுதந்திர முடக்கம் என்பன குறித்து கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதியிடம் தமது கரிசனையை வெளியிட்டதாக அமைச்சர் ஆன் சுட்டிக்காட்டியுள்ளார்.