கண்காணிப்பாளராக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் பாடத்தின் ஆசிரியராக இருத்தல் கூடாது..!
10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வுகள் மார்ச்சில் நடக்கின்றன. இவற்றில், 25 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேர்வுத்துறை சார்பில், நேற்று முன்தினம் திருச்சியில், உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பள்ளிக்கல்வி மற்றும் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர் மகேஷ், துறை செயலர் குமரகுருபரன் ஆகியோரும் ஆலோசனை வழங்கினர்.
அப்போது, பொது தேர்வில் கடந்த ஆண்டு நடந்த முறைகேடு போன்று, இந்த ஆண்டு நடக்காமல், எந்த இடத்திலும் குழப்பம் இன்றி, தேர்வை நடத்த அறிவுறுத்தப்பட்டது.
* தேர்வில் முறைகேடுகள் இல்லாத அளவுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்
* தேர்வுத்துறை விதிகளை தேர்வின்போது முறையாக பின்பற்ற, வேண்டும்.
*புகார்கள் எழுந்தல், கண்காணிப்பாளர் மட்டுமின்றி, மையத்தை நிர்வகிக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
*அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கலாம்.
*தேர்வு மைய கண்காணிப்பாளராக தனியார் பள்ளி தலைமையாசிரியர்களை நியமிக்கக் கூடாது. கண்காணிப்பாளராக நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தேர்வு நடைபெறும் பாடத்தின் ஆசிரியராக இருத்தல் கூடாது.
*கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.