மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ..!
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் தென்னிந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் இக்கோயில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது .
இந்நிலையில் நேற்று இரவு, கிழக்கு மாட வீதி வாயிலில் நள்ளிரவு முதல் மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருந்தார். திடீரென அவர் கையில் வைத்திருந்த பாட்டிலில் உள்ள பெட்ரோலை கோவில் வாசலில் ஊற்றி தீவைத்தார். பிறகு, சிறிது சிறிதாக பெட்ரோலை தீயில் ஊற்றினார். கோவில் அருகே வசித்தவர்கள், இதனை பார்த்து அச்சம் அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்ம நபர், மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது போதையில் அவ்வாறு செய்தாரா என விசாரணை நடக்கிறது.
மது போதையில் மர்ம நபர்கள் தீ வைத்தது தெரியவந்தது மர்ம நபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதுவதாகவும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வோம் என்றும் போலீஸார் தெரிவித்தனர். தீ வைத்த மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாயளர்களிடம் பேசிய இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘கோயில் வாசலில் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்ற மர்ம நபர்களை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றி அடிக்கடி எழும் சர்ச்சைகள் சிவ பக்தர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவத்தால் அபசகுணம் வந்துவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. பொதுவாக ஆகம விதிகளின்படிதான் கோயில்கள் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற துர்சம்பவங்கள் நடக்கும்போது செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனை திருக்கோயில் அர்ச்சகர்கள் முறைப்படி செய்து வருகின்றனர்.