சுமத்தப்பட்ட குற்ற வழக்குகள் தொடர்பில் டொனால்ட் ட்ரம்பின் வியூகம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தன் மீது சுமத்தப்பட்ட குற்ற வழக்கு விசாரணையை ஒத்திவைப்பது டொனால்ட் ட்ரம்பின் எண்ணம் என அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் சட்டத்தரணி நீமா ரஹ்மானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பதவிக்காலத்தில் இருந்தபோது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான குற்ற வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க முடியாது என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை அறிவிப்பது காலவரையின்றி தாமதமாகும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு
முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் பதவியில் இருந்தபோது 2021 ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்காவின் வாஷிங்டனின் தலைநகரில் இடம்பெற்ற பொதுக் கலவரம் தொடர்பாக அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைப்பது முன்னாள் ஜனாதிபதியின் எண்ணம் என அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் சட்டத்தரணி நீமா ரஹ்மானி தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை நடத்த முடியாது என்பதே இதற்கு காரணம் என ரஹ்மானி குறிப்பிட்டுள்ளார்.