குற்றவாளிகள் மிகவும் வெட்கக் கேடானவர்களாகி வருகின்றனர்! வேதனை தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் கார் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவில் ஆண்டுதோறும் 90,000 கார்கள் திருடப்படுவதாகவும், அதன் விளைவாக கனேடிய காப்பீட்டு பாலிசிதாரர்கள் மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு சுமார் ஒரு பில்லியன் டொலர்கள் செலவு ஆவதாகவும் அரசு கூறுகிறது.
மேலும், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெரும்பாலான திருடப்பட்ட ஆட்டோக்கள் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டவை என்று ஒட்டாவா கூறுகிறது.
இந்த நிலையில், திருடப்பட்ட வாகனங்களின் ஏற்றுமதியை சமாளிக்க அரசு 28 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருப்பது மற்றும் கடத்துவது, வாகன அடையாள எண்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட குற்றத்தின் பல்வேறு கட்டங்களில் வாகன திருட்டுக்கு தீர்வு காண கனடாவில் வலுவான சட்டங்கள் உள்ளன என ஃபெடரல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தேசிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாகனத் திருட்டு குறித்து கவலை தெரிவித்தார்.
அப்போது அவர், ”கவர்ச்சிகரமான கோஷம் வாகனத் திருட்டை நிறுத்தாது; இரண்டு நிமிட யூடியூப் வீடியோ ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை நிறுத்தாது. வாகனத் திருட்டைத் தடுப்பது என்பது சட்ட அமலாக்கம், எல்லை சேவைகள், துறைமுக அதிகாரிகள், கார் தயாரிப்பாளர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைப்பதாகும்” என்று கூறினார்.
அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘வாகன திருட்டுகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. குற்றவாளிகள் மிகவும் வெட்கக் கேடானவர்களாகி வருகின்றனர்.
மேலும் திருடப்பட்ட கார்களுக்கான சர்வதேச கறுப்பு சந்தை வளர்ந்துள்ளது. இந்த குற்றவாளிகளை தடுக்கவும், இந்த திருட்டுகள் நடக்காமல் தடுக்கவும், நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.