நள்ளிரவில் குடிகாரனிடம் அடிவாங்கிய கீர்த்தி சுரேஷ்… பின்பு நடந்தது என்ன?
நடிகை கீர்த்தி சுரேஷ், நள்ளிரவில் தன்னை ஒரு குடிகாரன் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தவிர தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ள கீர்த்தி, தற்போது பாலிவுட்டிலும் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அவர் நடிக்கும் முதல் இந்தி படத்தை அட்லீ தயாரிக்கிறார்.
அப்படத்திற்கு பேபி ஜான் என பெயரிடப்பட்டு உள்ளது. வருண் தவான் நாயகனாக நடிக்கும் இப்படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
பேபி ஜான் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர தமிழில் சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார் கீர்த்தி.
இதில் சைரன் படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அந்தோணி பாக்கியராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள இப்படம் வருகிற பிப்ரவர் 16-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், சைரன் பட புரமோஷனில் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தன் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதன்படி “ஒரு நாள் இரவில் தன்னுடைய தோழியுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாராம்.
அப்போது குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் கீர்த்தி மேல் கைபோட்டாராம். இதனால் கடுப்பான கீர்த்தி அந்த நபருக்கு கன்னத்திலேயே பளார் பளார் என அறைவிட்டு அங்கிருந்து சென்றாராம்.
பின்னர் கொஞ்சம் தூரம் சென்றதும், கீர்த்தியின் தலையில் பலத்த அடி விழுந்துள்ளது. சில நிமிடங்கள் என்ன நடந்தது என்று புரியாமல் இருந்த கீர்த்தி சுரேஷ், திரும்பி பார்த்தபோது அந்த குடிகாரன் தான் தன்னை தலையில் தாக்கிவிட்டு ஓடியதை பார்த்துள்ளார்.
உடனே தனது தோழியுடன் சேர்ந்து அந்த குடிகாரனை விரட்டி பிடித்து அருகில் இருந்த போலீஸ் பூத்தில் நடந்ததை கூறி அவனை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்றாராம்” அவர் சொன்ன இந்த கதையை கேட்டு கீர்த்தியின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.