தெருவுக்கு தெரு விரட்டி பிடிக்க போறாங்க!! உங்கள் வாகனத்தில் பிப்.17க்கு பின் கட்டாயம் இது இருந்தாகணும்!
வாகன ஓட்டிகள் உடனடியாக உயர்-பாதுகாப்பான வாகன பதிவெண்களை பெற வேண்டும் என கர்நாடக போக்குவரத்து துறை காலக்கெடு விதித்துள்ளது. இந்த காலக்கெடு எந்தெந்த வாகன ஓட்டிகளுக்கு பொருந்தும்? உயர்-பாதுகாப்பு வாகன பதிவெண்ணை எவ்வாறு
கர்நாடகா மாநிலத்தில், சுருக்கமாக HSRP எனப்படும் உயர்-பாதுகாப்புமிக்க நம்பர் பிளேட்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டுமென கர்நாடக போக்குவரத்து துறையால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இன்னமும் நிறைய வாகன ஓட்டிகள் HSRP-ஐ பெறவில்லை என அவ்வப்போது புகார் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த புதிய நம்பர் பிளேட்டை பெறுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்-பாதுகாப்புமிக்க பதிவெண்ணை கொண்டில்லாத வாகன ஓட்டிகளுக்கு பிப்ரவரி 17ஆம் தேதிக்கு பிறகு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 அபராதம் ஆனது முதல்முறையாக சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தான் என்றும், அதே வாகன ஓட்டி 2வது மற்றும் அதற்கு மேற்பட்ட தடவை சிக்கினால் ஒவ்வொரு முறையும் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்த காலக்கெடு 2023 நவம்பர் 17ஆம் தேதியில் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் அந்த காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் புதிய காலக்கெடு தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது, பிப்ரவரி 17 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 17ஆம் தேதி வரையில் நம்பர் பிளேட்டை அப்கிரேட் செய்துக் கொள்ள கால அவகாசம் உள்ளது. பிப்ரவரி 18ஆம் தேதியில் இருந்து போலீஸார் அபராதங்களை விதிக்க ஆரம்பித்துவிடுவர்.
கர்நாடகாவில், 2019 ஏப்ரல் மாதத்திற்கு பின் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் உயர்-பாதுகாப்புமிக்க பதிவெண் வழங்கப்பட்டு வருகிறது. ஆதலால், அந்த மாநிலத்தில் கடந்த சில வருடங்களில் புதியதாக வாகனம் வாங்கியவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், 2019 ஏப்ரல் மாதத்திற்கு முன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதன் உரிமையாளர்கள் HSRP-ஐ வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
2019 ஏப்ரலுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வைத்திருப்போர் உயர்-பாதுகாப்பு வாகன பதிவெண்ணை பெற்றுக் கொள்வர் என கர்நாடக மாநில அரசு நம்பியது. ஆனால், அந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகன நம்பர் பிளேட்டை மாற்றிக் கொள்ள பெரியதாக ஆர்வம் காட்டாததால், வேறு வழியின்றி தற்போது இதற்கு காலக்கெடுவை கர்நாடக போக்குவரத்து துறை விதித்துள்ளது.
கர்நாடகாவில் வசிக்கும் வெளி மாநிலத்துக்காரர்களும் தங்களது வாகனத்தின் நம்பர் பிளேட்டை HSRP-க்கு அப்கிரேட் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 2019 மே மாதத்தில் இருந்து வாகனங்களுக்கு HSRP வழங்கப்பட்டு வருகிறது. ஆதலால், 2019 மே மாதத்திற்கு முன் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை கர்நாடகாவில் பயன்படுத்துகிறீர்கள் எனில் பிப்ரவரி 18ஆம் தேதிக்குள் HSRP-ஐ பெற்றுவிடுங்கள்.
கர்நாடகாவில் HSRP-ஐ பெற https://transport.karnataka.gov.in அல்லது www.siam.in இணையத்தளத்தை அணுகி, ‘Book HSRP’ க்ளிக் செய்யவும். பின்னர், வாகனம் குறித்த விபரங்களை உள்ளீடு செய்து, HSRP பொருத்தலுக்கான சவுகரியமான டீலர் மற்றும் தேதியை தேர்வு செய்யவும். பின், இதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் இருப்பிடத்திற்கே வந்து உயர்-பாதுகாப்பு நம்பர் பிளேட்டை பொருத்தி தருகின்றன.