ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக ஏன் இவ்வளவு போட்டி?எவ்வளவு சம்பளம், பணம் கிடைக்குதுனு பாருங்க

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வீரர்களும் கேப்டனாக வேண்டும் என்று கடுமையான முயற்சிகளை செய்து வருகிறார்கள். கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்றால் போர் கொடி தூக்குகிறார்கள். ஏன் இந்த கேப்டன் பதவிக்கு அவ்வளவு மவுஸ் இருக்கிறது என்று தெரியுமா?

கேப்டனாக இருக்கும் வீரர்களுக்கு பல அணிகளில் சம்பளம் மிகவும் அதிகம். மேலும் விளம்பரங்களில் நடிப்பதற்கு கேப்டன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் மூலம் பல கோடிகள் வருமானம் கிடைக்கும். மேலும் ஒரு ஐபிஎல் அணியின் கேப்டன் என்றால் அதன் தனி பெருமை தான்.

இந்த நிலையில் ஒவ்வொரு அணியிலும் கேப்டன்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் கே எல் ராகுல் அதிகபட்சமாக 17 கோடி வாங்குகிறார். அதன்பிறகு டெல்லி அணியின் கேப்டனாக 2021 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ரிஷப் பண்ட் 16 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.இவர் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் அடைந்ததை எடுத்து அந்த பதவிக்கு வந்தவர்.

தற்போது ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்கு மாற்றப்பட்டு தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 15 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு 14 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ்க்கு 12 கோடியே 25 லட்சம் ரூபாய் சம்பளம் நிர்ணிக்கப்பட்டு இருந்தது. இவர் 2022 ஆம் ஆண்டு ஏயன் மார்கனுக்கு பதிலாக வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர கேப்டனும் ஐந்து முறை கோப்பையை வென்று தந்தவருமான மகேந்திர சிங் தோனிக்கு 12 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

தோனிக்கு 16 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் ஜடேஜா அந்த சம்பளத்தை வாங்கட்டும் என்று கூறி தோனி தன்னுடைய ஊதியத்தை குறைத்துக் கொண்டார். அதேபோன்று பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கும் ஷிகர் தவானுக்கு 8 கோடியே 25 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. குஜராத் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் சுப்மன் கில்லுக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ஆர் சி பி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்கா வீரர் டூப்ளிசிக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர் 2022 ஆம் ஆண்டு கோலிக்கு பதிலாக கேப்டனாக மாறினார். ஐபிஎல் தொடர்களை குறைந்த ஊதியம் வாங்கும் கேப்டன் என்ற சோகமான பெருமையை சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் எய்டன் மார்க்கரம் பெற்றிருக்கிறார். இவர் 2 கோடி 60 லட்சம் தான் சம்பளம் வாங்குகிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *