தமிழகத்துக்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம்..!
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்துக்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர்லால் குமாவத்தும், இணை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த் மற்றும் அரவிந்தன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.