நாளை மறுநாள் சென்னை வருகிறார் ஜே.பி.நட்டா..!
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 11-ம் தேதி சென்னை வருகிறார். இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. அணியில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்களுடன் அவர் பேசி, கூட்டணியை இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாமக, தேமுதிக, அமமுக மற்றும் தமாகா உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க.விடம் கூட்டணி குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பா.ஜ.க. தலைவர் நாட்டா பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 25-ம் தேதி திருப்பூரில் நடைபெறவுள்ள பிரமாண்ட மாநாட்டிற்கு முன்பாகவே கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலை இருப்பதால் பா.ஜ.க. வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னரே கூட்டணியை உறுதி செய்ய திட்டமிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.