நாளை மக்கள் குறைதீர் முகாம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் உள்ள வட்டங்களில் மக்கள் குறைதீர் முகாமை மாதந்தோறும் நடத்த தமிழக அரசால் அண்மையில் முடிவு செய்யப்பட்டது . இம்முகாம் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெற இயலும். இந்த வகையில் இம்மாதத்திற்கான மக்கள் குறைதீர் முகமானது வருகின்ற 10ம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. இந்த முகமானது சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறும்.
இம்முகமானது சுமார் 19 மண்டலங்களில் பிப்ரவரி 10ம் தேதியன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை நடத்தப்படும். இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்ப்பது, பெயர் நீக்குவது, வீட்டு முகவரி மற்றும் கைபேசி எண்ணை மாற்றுவது ஆகிய சேவைகள் பொது மக்களுக்காக செய்து தரப்பட உள்ளது. நியாய விலை கடைகளுக்கு நேரில் செல்ல இயலாத வயதானவர்களுக்கு அங்கீகார சான்றும் இம்முகாமில் வழங்கப்படவுள்ளது. மேலும் மக்களுக்கு நியாய விலை கடைகளின் பொது விநியோகத்தில் அல்லது தனியார் சந்தைப்படுத்தலில் ஏதேனும் புகார்கள் இருப்பின் அதனையும் இம்முகாமில் தெரிவிக்கலாம்.