அமுலுக்கு வந்த புதிய சட்டம் : அத்தை மகன் மாமன் மகள் திருமணம் செய்ய தடை..!
பொதுவாக இந்துக்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் அத்தை மகன் – மாமன் மகள் அல்லது அத்தை மகள் – மாமன் மகனை திருமணம் செய்வது சர்வ சாதாரணம். இந்த உறவுமுறை முறைப்பெண், முறை மாப்பிள்ளை என காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வருகின்றன.
தற்போதுநாட்டில் ஒவ்வொரு மதத்திலும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்ற வழியமைக்கும் ‘பொது சிவில் சட்டத்தை’ நாடு முழுமைக்கும் கொண்டுவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகளை அமல்படுத்தியுள்ளது.
அதேபோல், திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. தவறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்ட உறவுகள் என்ற பிரிவில், தந்தை சகோதரியின் மகன் மகள் மற்றும் தாயின் சகோதரரின் மகன் மகள் (அதாவது அத்தை மகன் மாமன் மகள்)என்ற உறவுமுறையும் இடம்பெற்றுள்ளது.
இந்த தடையை மீறி திருமணம் செய்து கொள்வோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிவ் இன் உறவு
திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாகிறது. லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோா் 18 வயதுக்குள்ளாக இருக்கக் கூடாது. அதில் யாரேனும் ஒருவா் 21 வயதுக்கு உள்பட்டு இருந்தால் அவா்களின் பெற்றோா் அல்லது காப்பாளருக்கு பதிவாளா் தகவல் தெரிவிக்க வேண்டும்.
உத்தரகாட்ண்டில் வசிக்கும், மாநிலத்தைச் சேர்ந்தவரோ அல்லது சேர்ந்தவர் அல்லாதவரும் பதிவாளரிடம் தங்களது உறவு குறித்து தகவல்களை அளித்துப் பதிவு செய்ய வேண்டும். உத்தரகாண்டைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்களில் வசித்து, லிவ் – இன் உறவில் இருந்தால் அவர்கள் தங்களது பகுதிக்குள்பட்ட பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும்.
தவறும்பட்சத்தில் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவறான தகவல்களைச் சமா்ப்பித்து பதிவு செய்யப்பட்டால், அவா்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. லிவ்-இன் உறவை முடிவுக்கு கொண்டு வர அனுமதி அளித்தும் மசோதாவில் விதிகள் இடம்பெற்றுள்ளன.
மசோதாவில் லிவ்-இன் உறவில் இருக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதுடன், உறவில் தனித்துவிடப்பட்ட பெண்களுக்கு தங்கள் துணையிடமிருந்து குழந்தை பராமரிப்புக்கான செலவைப் பெறவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் முக்கிய அம்சமாக, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகளை மசோதா கொண்டுள்ளது.
உத்தரகாண்டில் கடந்த 2022 பேரவைத் தோ்தலில், ‘மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. தோ்தலில் வென்று பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதும், பொது சிவில் சட்ட மசோதா வரைவை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு உருவாக்கிய 172 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்ட மசோதா 392 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், பொது சிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்ய உத்தரகண்ட் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடா் திங்கள்கிழமை கூட்டப்பட்டது. 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பேரவை கூடியதும், பொது சிவில் சட்ட மசோதாவை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தாக்கல் செய்தாா்.
தாக்கல் செய்யப்பட்ட செவ்வாய்க்கிழமையன்றே மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவை அலுவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 172 பக்கங்கள் கொண்ட மசோதாவில் உள்ள பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து விவாதிக்க போதிய நேரமில்லை என்று எதிா்க்கட்சிகள் முன்வைத்த எதிா்ப்பைத் தொடா்ந்து, அவைத் தலைவா் ரிது கன்தூரி விவாதத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கினாா்.
விவாதத்துக்குப் பின்னா் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.