இது தெரியுமா ? வல்லாரை இலையை நெய்விட்டு வதக்கி, மிளகாய், உப்பு சேர்த்து…
*வல்லாரை இலையை நெய்விட்டு வதக்கி, மிளகாய், உப்பு சேர்த்து 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு கலந்து அரைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
* மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கிவிடும்.
* கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
* பிரசவத்திற்கு பிறகு பெண்களின் எடை கூடும். தினசரி சிறிய கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் கட்டுக்கோப்பாக மாறும்.
* முள்ளங்கி கீரையைச் சமைத்து சாப்பிட்டு வர, இரும்புச்சத்து கிடைப்பதோடு எடை அதிகமாகாமல் இருக்கும்.
* மாதவிலக்கு சீராக இல்லாத பெண்களும், வெள்ளைப்படுதல் போன்ற தொல்லைகள் உள்ள பெண்களும் நீர்முள்ளி கஷாயம் செய்து அருந்தி வந்தால் இத்தகைய தொல்லையிலிருந்து விடுபடலாம்.
* இஞ்சிச் சாறுடன் பாலைக் கலந்து உட்கொண்டால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
* ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு, அரைத்தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் கண் நோய் வராது.
* தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.
* வாழைப்பூவைப் பொடிப் பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கைக்கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.
* வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.
* இஞ்சியைச் சாறெடுத்து கொஞ்சம் உப்புப் போட்டு குடித்தால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.*
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் வராது.
* இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கிவிடும்.
* சர்க்கரை பொங்கல் செய்யும்போது, கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* ரவா கேசரி, சேமியா கேசரி, அவல் கேசரி செய்யும்போது வெள்ளரி விதைகளைச் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
* இஞ்சியைப் பச்சடி செய்து உணவுடன், கலந்து சாப்பிட வயிற்றுவலி, கபம், களைப்பு நீங்கும்.
* பால்கோவா செய்யும் போது வெள்ளைவெளேரென்று வர வேண்டுமானால் பால் சுண்டிவரும்போது கொஞ்சம் மைதா கலந்து கிளற வேண்டும்.
* எந்த வகை இனிப்பு செய்தாலும் ஒரு கல் உப்பு அதில் சேர்க்க வேண்டும். இதனால் அந்த இனிப்பு திகட்டாமல் இருக்கும்.
* இஞ்சியைச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பில் தோய்த்துத் தின்றால், பித்தத்தாலும் கபத்தாலும் தோன்றும் நோய்கள் வருவதில்லை.
* ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப்பொடி கலந்து தாளித்துக் கொட்டினால் புதுமையான ஊறுகாய் தயார்.
* பூசணி, சுரைக்காயைக் கூட்டு செய்யும்போது சிறிது தனியாவை அரைத்துப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்க, கூட்டு கமகமவென்று இருக்கும்.
* பஜ்ஜி போடும்போது நன்றாக உப்பி வருவதற்காக சோடாமாவு சேர்ப்பதற்கு பதில் சிறிதளவு இட்லி மாவைச் சேர்த்துப் பாருங்கள். பஜ்ஜி நன்றாக உப்பி வருவதுடன் உடம்புக்கும் கெடுதல் செய்யாது.
* தயிர்சாதம் வெண்ணெய்ப் போன்று இருக்க, சாதம் வேக வைக்கும்போது, அரிசியுடன் ஒன்றுக்கு இரண்டு என்ற வீதத்தில் பாலைக் கலந்து சாதம் வைத்தால் தயிர்சாதம் புளிப்பில்லாமல் சுவையுடன் இருக்கும். எளிதில் கெட்டும் போகாது.
* சேமியா, நூடுல்ஸ் இவற்றை செய்யும்போது ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு வேகவைக்க வேண்டும்.
* பொதுவாக எந்த ஊறுகாய் தயாரித்தாலும் அவற்றுடன் கடுகு எண்ணெய் கொஞ்சம் சேர்த்தால் ஊறுகாய் சீக்கிரம் கெட்டுப் போவதைத் தவிர்க்கலாம்.
* நான்- ஸ்டிக் பேனில் திரட்டுப்பால் செய்தால் பால் பொங்காது. அடிக்கடி கிளற வேண்டிய அவசியமில்லை. ஓரங்களிலும் ஒட்டாது. கொதித்துக் குறையும் அளவு கூட தெரியாது. சாதாரண பாத்திரத்தில் செய்வதை விட 50 கிராம் அதிகமாகவே திரட்டுப்பால் கிடைக்கும்.
* முருங்கைக் கீரை பொரியல் செய்யும்போது வேர்க்கடலையைப் பொடித்து அதில் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.
* முட்டைக் கோஸை நறுக்காமல், கேரட் துருவி மூலம் துருவினால் எளிதில் வெந்துவிடும். கேஸ் செலவும் மிச்சமாகும்.
* பட்டாணி சமைக்கும்போது அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால் மணமுடன் இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.