இது தெரியுமா ? தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றும்..!
எலுமிச்சை மட்டுமல்ல, அதன் தோல் அத்தனை மருத்துவக் குணங்கள் கொண்டது. அந்த மகிமை தெரிந்துதான் நம் முன்னோர்கள் எலுமிச்சையைத் தோலோடு சேர்த்து ஊறுகாயாகத் தயாரித்தார்கள். எலுமிச்சைத் தோலில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன தெரியுமா
எலுமிச்சைச் சாறை விட, எலுமிச்சை தோலிலும் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது. கொதிக்கவைத்த தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சை தோலும் சேர்த்து கொதிக்க வைத்த பானத்தை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்துக் கொள்வோம்.
முதலில் எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ளவும். அதன் பிறகு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி வைத்து, அந்த நீரை 3 நிமிடம் அடுப்பில் நன்கு கொதிக்கவைத்து இறக்கவும். 10 முதல் 15 நிமிடம் ஆறவைத்து பின்பு அந்த நீரை வடிகட்டி வைத்துக் கொண்டு, ஒரு டம்ளர் நீருடன் சிறிது தேன் கலந்து குடிக்கவும்.
இந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது. எனவே நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
தினமு இந்த காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு நல்ல சுறுசுறுப்பை தரும்.
செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ளும்.
தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடலை சுத்தப்படுத்தும்.
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது
* மலச்சிக்கல் வராமல் தடுக்கும்
எலுமிச்சைத் தோலில் அதிக அளவில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல், அல்சர், மேலெழும் இரைப்பை அமிலத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சலிலிருந்து காக்கும். அதோடு, உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவும், சர்க்கரை நோய் பாதிப்பைக் குறைக்கும்
* கண்களின் ஆரோக்கியம் காக்கும்!
கரோட்டினாய்டுகள் (Carotenoids) உடலுக்குள் வைட்டமின் ஏ-வாக மாறுகின்றன. கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும், தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் வைட்டமின் ஏ உதவும். எலுமிச்சைத் தோலில் கரோட்டினாய்டுகள் அதிகமாக இருக்கின்றன. இவை கண்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும். இதிலுள்ள வைட்டமின் சி, வயதானவர்களுக்கு ஏற்படும் கண் குறைபாடுகள், தசைச் சீர்கேடுகளைத் தடுக்கும்.
* காயங்களை விரைவாகக் குணப்படுத்தும்!
எலுமிச்சைத் தோலின் சாறு, காயங்களைக் குணப்படுத்த உதவும். இது பாக்டீரியா பரவாமல் தடுக்கும். சர்க்கரைநோயாளிகளுக்குக் காயம் ஏற்பட்டால், மெதுவாகத்தான் குணமாகும். எலுமிச்சைத் தோலின் சாறு விரைவில் குணமாக்கும். `எலுமிச்சை’ உள்பட சிட்ரிக் அமிலப்பழங்களின் தோலின் சாற்றைச் சர்க்கரைநோயாளிகளின் காயங்களில் நேரடியாகத் தடவினால், காயம் சீக்கிரம் குணமாகும்’ என்று ஓர் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். திசு வளர்ச்சியும், இணைப்புத் திசுக்களின் வளர்ச்சியும்தான் காயங்கள் குணமாகக் காரணமானவை.
* முகப்பருவைப் போக்கும்
எலுமிச்சைத் தோலில் இருக்கும் ஆஸ்ட்ரின்ஜென்ட் (Astringent ), கிருமிகளைக் கொல்லும் ஆன்டிமைக்ரோபியல் (Antimicrobial) ஆகியவை முகப்பரு வராமல் தடுப்பவை. எலுமிச்சைத் தோலையும், கொஞ்சம் புதினா இலையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசிக்கொள்ளலாம். எலுமிச்சைத் தோலிலிருக்கும் எண்ணெய் சருமத்தைச் சுத்தப்படுத்த உதவும், புதினா இலை முகத்தைப் பொலிவாக்க உதவும்.
* கொசு லார்வாக்களை அழிக்கும்!
சிலவகை கொசுக்களின் லார்வாக்களை அழிக்கும் பூச்சிக்கொல்லியாக எலுமிச்சைத் தோலின் சாறு செயல்படும். தேங்கி நிற்கும் தண்ணீரில் எலுமிச்சையைப் பிழிந்து, அதன் தோலையும் போட்டுவைத்தால் போதும், கொசு லார்வாக்கள் அழியும். இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இப்படிச் செய்தால், கொசு லார்வாக்கள் வளராமல் தடுக்கும்.