தப்பா சொல்லிட்டேன், அந்தர்பல்டி அடித்த டிவிலியர்ஸ் – கோலி- அனுஷ்கா ஜோடி 2ஆவது குழந்தை கன்ஃபார்ம் இல்லையா?
அனுஷ்கா சர்மா 2ஆவது முறையாக மாசமாக இருப்பதாகவும், விரைவில் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2ஆவது குழந்தையை எதிர்பார்ப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து வதந்தி பரவி வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இடம் பெற்று விளையாடிய கோலியின் நண்பருமான டிவிலியர்ஸ் இது குறித்து உறுதியாக கூறியிருந்தார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: டிவிலியர்ஸ் யூடியூப் சேனல் வாயிலாக தன்னை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களுடன் கேள்வி பதில் உரையாடல் நிகழ்த்தினார். அதில், ஒருவர் விராட் கோலியைப் பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது தான் டிவிலியர்ஸ், விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதியினர் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். நான் கோலிக்கு மெசேஜ் அனுப்பினேன். அப்போது தான் இதனை அறிந்து கொண்டேன். என்னால், அதிகளவில் எந்த செய்தியும் தர முடியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் அவர் நலமாக இருக்கிறார். குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறாததற்கு இதுதான் காரணம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் தற்போது தான் தவறு செய்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் தவறு செய்துவிட்டேன். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினரின் 2ஆவது குழந்தை செய்தியில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார். குடும்பம் தான் முதலில் முக்கியம். அதன் பிறகு தான் கிரிக்கெட். இதனை தவறாக புரிந்து கொண்டு நான் அவ்வாறு பேசிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும், என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பது பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. என்ன காரணமாக இருந்தாலு, அவர் வலிமையாக, நலமாக திரும்பி வருவார் என்று நம்புவதாக கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி 1-1 என்று சமன் செய்த நிலையில், 3ஆவது டெஸ்ட் வரும் 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடக்க இருக்கிறது.
இந்தப் போட்டியில் விராட் கோலி இடம் பெறுவாரா என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே போன்று எஞ்சிய போட்டிகளுக்கான அணி வீரர்கள் குறித்தும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இன்று இரவுக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.