அடுத்த வாரிசு நான் தான்… மன்னர் சார்லசின் ’ரகசிய மகன்’ கூறும் சில அதிரவைக்கும் தகவல்கள்

மன்னர் சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் ஒருவர், மன்னர் நலம்பெறவேண்டும் என வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதுடன், சில அதிரவைக்கும் தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.

மன்னர் சார்லசின் ரகசிய மகன்
பிரித்தானியாவில் பிறந்து ஒரு அவுஸ்திரேலிய தம்பதியருக்கு தத்துக்கொடுக்கப்பட்டவர் Simon Dorante-Day (57). தான் பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கும் அவரது ரகசிய காதலியாக இருந்த கமீலாவுக்கும் பிறந்த குழந்தை என்று கூறி அவர் அவ்வப்போது செய்திகளில் இடம்பிடிப்பதுண்டு.

தனது இளவயது புகைப்படங்களைப் பார்த்தால் சார்லசைப்போன்ற கன்னங்களும், கமீலாவைப்போன்ற தலைமுடியும் தனக்கு இருப்பதைக் காணலாம் என அவர் முன்பு கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

மன்னர் நலம்பெற வாழ்த்துக்கள்
இந்நிலையில், தனது முகநூல் புத்தகத்தில் சைமன் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிர்ச்சியை ஏற்படுத்தும் அடுத்த தகவல்
மன்னரை வாழ்த்தியதோடு நிற்கவில்லை சைமன். கூடவே அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தியையும் வெளியிட்டுள்ளார்.

ஆம், தான் மன்னர் சார்லசுடைய மகன் என்பதை நிரூபிப்பதற்காக, மன்னர் சார்லசுடைய இளைய மகனான இளவரசர் ஹரியை தாங்கள் தொடர்பு கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார் சைமன்.

தான் மன்னர் சார்லசுடைய மகன் என்பதை நிரூபிக்க, தங்களுக்கு ஹரி உதவக்கூடும் என நம்பத்தகுந்த ஒருவரிடமிருந்து தனக்கும் தன் மனைவியாகிய எல்வியானாவுக்கும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் சைமன்.

ஆகவே, ஹரியை சந்தித்து, அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு, அவரது DNAவை கேட்கலாம் என தங்களுக்கு ஒருவர் ஆலோசனை கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார் சைமனின் மனைவியாகிய எல்வியானா.

அடுத்த வாரிசு நான்தான்
தனக்கு அசாதாரண விதங்களில் நோய்களை குணமாக்கக்கூடியவர்களைத் தெரியும் என்று கூறும் சைமன், மன்னர் சார்லஸ், தான்தான் அவருடைய மகன் என்னும் உண்மையை ஒப்புக்கொண்டால், தான் அவர் நலம்பெற உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நான்தான் மன்னர் சார்லசுடைய மகன் என நான் நிரூபிக்கும்போது, எல்லாமே மாறிவிடும் என்று கூறும் சைமன், அரியணையேறும் வரிசையில் அடுத்ததாக நான் இருப்பேன், எல்வியானா என் ராணியாக இருப்பார், அப்புறம் அடுத்த மன்னரும் ராணியும் வில்லியமும் கேட்டும் அல்ல, நாங்கள்தான் என்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *