Facebook நேரலையில் நடந்த கொலை.., தனிப்பட்ட பகையால் மும்பையில் பயங்கரம்
Facebook நேரலையின் போது சிவசேனா தரப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கியால் சுட்டு கொலை
சிவசேனா (யுபிடி) தலைவர் வினோத் கோசல்கரின் மகன் அபிஷேக் கோசல்கர். இவர் சிவசேனா (யுபிடி) முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர் நேற்று Facebook நேரலையில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த மவுரிஸ் நோரோனா என்பவர் அபிஷேக் கோசல்கரை திடீரென துப்பாக்கியால் 3 முறை சுட்டார். இதில் உயிருக்கு போராடிய அபிஷேக் கோசல்கரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
இதனிடையே, துப்பாக்கியால் சுட்ட மவுரிஸ் நோரோனா தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மவுரிஸ் நோரோனா மற்றும் அபிஷேக் கோசல்கர் இடையே தனிப்பட்ட பகை இருந்ததாகவும், அது சமரசம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் அபிஷேக் கோசல்கர், மவுரிஸ் நோரோனாவை நேரலைக்கு வர அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் பேஸ்புக்கில் நேரலையில் ஒளிபரப்பானது.