வீட்டு வாடகை கொடுக்காமல் இருக்க இப்படி ஒரு ட்ரிக்கா? பொறி வைத்து பிடித்த ஓனர்.. வைரல் சம்பவம்!

வீட்டு வாடகை தராமல் உரிமையாளரை ஏமாற்றும் விதமாக வாடகைதாரர் ஒருவர் பூட்டை அடிக்கடி மாற்றியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவை அறுத்து எடுத்து, வாடகைக்கு இருந்தவருக்கு பாடம் புகட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

இன்றைய காலகட்டத்தில், சொத்தில் முதலீடு செய்வது மிகவும் புத்திசாலித்தனமான விஷயம் என்று மக்கள் நினைக்கிறார்கள். தங்கள் சேமிப்பிலிருந்து ஒரு சொத்தை வாங்கிய பிறகு, அதை வாடகைக்கு விட்டு தங்கள் சொந்த வருமானம் ஈட்டுகிறார்கள். ஆனால் சில சமயங்களில் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களிடம் இருந்து பணத்தை பெறுவது தலைவலியை ஏற்படுத்தி விடும்.

சாமுவேல் லீட்ஸ் என்ற நபர் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். இவரது வாடகைதாரர் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தவில்லை. சாமுவேலுக்குத் தெரியாமல் வீட்டின் பூட்டையும் மாற்றியுள்ளார். இந்நிலையில் அவர்களை வெளியேற்றுவதற்கு கதவை நீக்குவதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தார். சாமுவேல். இதன்பின்னர், ரம்பத்தை கொண்டு வந்து அந்த வீட்டின் கதவை வெட்டி எடுத்தார். இதைத்தொடர்ந்து, வாடகைதாரர் போலீஸாருக்கு போன் செய்தபோது, ​​பேப்பர்களைப் பார்த்த போலீசார், வாடகைதாரரை உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் சொந்த வீட்டிலிலிருந்து வாடகைதாரரை வெளியேற்றுவதற்காக சாமுவேல் ரம்பத்தால் கதவை அறுக்கும் வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் செய்த செயலுக்காக எனக்கு எந்த வருத்தமும் ஏற்படப்போவது இல்லை. வாடகைதாரர் வழக்கு தொடர்ந்தாலும் என் பக்கம்தான் தீர்ப்பு கிடைக்கும் என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *