பயணத்தை தலைகீழாக மாற்றப்போகும் வாகனங்கள்.. விரைவில் வெளியாகும் 8 புதிய கார்கள் & பைக்குகள் – ஒரு பார்வை!
சுசூகி நிறுவனத்தின் புகழ் பெற்ற வாகனமான ஸ்விப்ட் காரின் 2024ம் ஆண்டு மாடல் இவ்வாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் ஆரம்ப விலை 6 லட்சமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக புகழ் பெற்ற BMW நிறுவனம் தனது புதிய 5 சீரிஸ் வாகனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த BMW 5 சீரிஸ் LWB கார்கள் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை சுமார் 75 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பிரபல ஹ்யுண்டாய் நிருவனம் தங்களது புதிய N Series கார்களை வருகின்ற ஏப்ரல் மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விலை சுமார் 21 முதல் 24 லட்சம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் Thar ரக வாகனங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் மஹிந்திரா தனது 5 கதவுகள் கொண்ட தார் காரை அறிமுக செய்யவுள்ளது. இதன் துவக்க விலை சுமார் 15 லட்சம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் புகழ் பெற்ற டாடா நிறுவனம் தனது புதிய CURVV என்ற வாகனத்தை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளது. இதன் விலை 10.5 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஹீரோ நிறுவனம் இந்த பிப்ரவரி மாதம் தனது Mavrick 440 பைக்கை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விலை சுமார் 1.5 முதல் 2 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிரபல சுசூகி நிறுவனம் தனது புதிய GSX 8R பைக்கை உலக சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய சந்தையில் இந்த பைக் எப்போது வெளியாகிறது என்ற தகவல் இல்லை. இதன் ஆரம்ப விலை சுமார் 10 லட்சம் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஹீரோ நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் வகை வாகனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. ஹீரோ XOOM பைக் 70,000 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது. மார்ச் மாதம் இந்த பைக் அறிமுகமாகும்.