மாயமான அமெரிக்க உலங்கு வானூர்தி : சடலமாக மீட்கப்பட்ட ஐவர்

அமெரிக்காவில் உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளானதில் அதில் பயனித்த 5 கடற்படை வீரர்களும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு அருகில் உள்ள Creech விமானப்படை தளத்தில் இருந்து San Diegoவில் உள்ள Marine Corps Air Station Miramar-க்கு, குறித்த கடற்படையினர் பயிற்சிக்காக உலங்கு வானூர்தியில் சென்றனர்.

அப்போது உலங்கு வானூர்தி திடீரென காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டபோது கலிபோர்னியாவின் பைன் பள்ளத்தாக்கில், காணாமல் போன உலங்கு வானூர்தி மோதி விபத்திற்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

பெரும் இழப்பு
இந்த விபத்தில் ஐந்து கடற்படை வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்த கடற்படையினரின் அடையாளங்கள் 24 மணிநேரத்திற்கு பின் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில்,

‘என்ன நடந்தது என்பதை பாதுகாப்புத் துறை தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகின்றோம். எங்கள் தேசத்தின் 5 சிறந்த போர் வீரர்களின் இழப்பு மிகவும் கவலைக்குரிய விடயம்.

அவர்களின் குடும்பங்களுக்கும், அவர்களின் படை மற்றும் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *