சரும பொலிவிற்கு உதவும் ஓட்ஸ்… இப்படியும் பயன்படுத்தலாம் தெரியுமா…!
பெரும்பாலும் உடலில் மிகப்பெரிய உறுப்பு என்றால் அது சருமம் தான். வெளிப்புற ஆபத்துகளில் இருந்து உடலை பாதுகாப்பது இந்த சருமமாக தான் இருக்கிறது.
இந்தப் பாதுகாப்பு அரண் மட்டும் முறையாக வேலை செய்யவில்லை என்றால் உடலுக்கு பல வகையான தீமைகள் ஏற்படும்.
மாசுபாடு, பருவநிலை மாற்றம், அதிகப்படியாக சூரிய ஒளி போன்ற அடிப்படை காரணங்களால் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படும்.
சரும பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு பலரும் பல விடயங்களை முயற்சித்து பார்த்து இருப்பார்கள். ஆனால் அது பலருக்கும் நன்மையை வழங்கி இருக்காது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் தங்களது சருமத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக ஓட்ஸை பயன்படுத்து வந்துள்ளார்கள். அது எப்படி பயன்படுத்தப்பட்டது என்றும் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
சருமத்திற்கு ஓட்ஸ்
ஓட்ஸ்களை எடுத்து பேஸ்ட் போல அரைத்து சருமத்தில் பூசி வரலாம். இது உங்களது சருமத்திற்கு ஊட்டச்சத்து கிடைக்க உதவுவதோடு வறட்சி, அலர்ஜி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கவும் உதவுகிறது எனலாம்.
பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
பருவ காலங்களில் ஏற்படும் சரும பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்.
சருமத்தில் பயன்படுத்தப்படும் மேக்கப் பொருட்களினால் ஏற்படும் அலர்ஜியில் இருந்து பாதுகாக்கிறது.
ரசாயன பொருட்கள் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையான ஓட்ஸை பயன்படுத்தலாம்.
ஓட்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
ஓட்ஸில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், விட்டமின் பி6, பி1, பி2, இரும்பு, புரதம், நார் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.