Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 10, 2024 – சனிக்கிழமை

மேஷம்:

உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியின் மீதும், குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது குறித்தும் இன்று கவனம் செலுத்துவீர்கள். மூத்தவர்களின் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் திறமைக்கு வணிகத்தில் ஏற்படுகின்ற தடைகள் ஒரு பொருட்டே கிடையாது.

ரிஷபம்:

இன்றைக்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் வீட்டில் அமைதியான சூழல் ஆகியவற்றை ஏற்படுத்த கவனம் செலுத்துவீர்கள். காதல் மலரும் அல்லது திருமண ஏற்பாடுகள் நெருங்கி வரும். உங்கள் தொழில்முறை வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படும். நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது பெற்றோரின் அறிவுரையை கேட்கவும்.

மிதுனம்:

அறிவார்ந்த கருத்துக்களை இன்று பரிமாறிக் கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் விவாதங்களை முன்னெடுப்பீர்கள். உங்கள் வசீகரத்திற்கு தகுந்தாற்போல காதல் உறவுகள் மலரும். கவனச்சிதறல்கள் இல்லாமல் பணிகள் மீது கவனம் செலுத்தவும்.

கடகம்:

இன்று உளவுப்பூர்வமான பந்தத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமண வாய்ப்புகள் கை கூடி வரும். வணிகத்தில் உங்கள் ஆழ்மனம் சொல்வதைக் கேட்டு முடிவு செய்யுங்கள். முத்துமாலை அணிந்து கொண்டால் உங்கள் எண்ண ஓட்டம் மேம்படும்.

சிம்மம்:

இன்றைக்கு உங்கள் தலைமைத்துவ பண்புகள் வெளிப்படும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். காதல் உறவுகள் உங்களுக்கு ஆற்றலை கொடுக்கும். மன உறுதி இருந்தால் தான் பணியிடத்தில் இலக்குகளை அடைய முடியும்.

கன்னி:

இன்றைய தினம் உங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் அறிவார்ந்த வகையில் அமையும். உங்கள் இயல்பான குணத்திற்கு பெற்றோரின் அங்கீகாரம் கிடைக்கும். வணிகத்தில் விசாலமான அணுகுமுறை உங்களுக்கு பலன் தரும்.

துலாம்:

இன்று உங்கள் வாழ்வில் நல்லிணக்கம் நிலவும். அமைதியான சூழலில் காதல் மலரும். திருமண வாழ்க்கையில் உளப்பூர்வமான மகிழ்ச்சி ஏற்படும். வணிகத்தில் தந்திரமான வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

விருச்சிகம்:

இன்றைய பொழுது மாற்றமிகு ஆற்றலால் நிரம்பியிருக்கும். உங்கள் உறுதியான எண்ணம் குறித்து பெற்றோர் பெருமை கொள்வார்கள். திருமணத்தின் மூலம் ஆழமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். காதலில் மாற்றமிகு அனுபவங்கள் கிடைக்கும்.

தனுசு:

சாகசம் நிறைந்த நடவடிக்கைகளில் பங்கேற்பீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையிலும் த்ரில்லிங்கான அனுபவம் கிடைக்கும். வணிகத்தில் வளர்ச்சியை எட்டுவீர்கள் மற்றும் பயணம் செய்கின்ற வாய்ப்பு உண்டாகும்.

மகரம்:

ஒழுக்கம், உறுதியான இலக்கு ஆகிய குணங்களைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் நிலையானதாக இருக்கும். வணிகத்தில் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்துவீர்கள். அதன் மூலமாக வெற்றி கிடைக்கும்.

கும்பம்:

இன்றைய நாளில் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள். மற்றும் புத்தாக்க சிந்தனையுடன் செயல்படுவீர்கள். திருமண வாய்ப்புகள் கை கூடி வரும். காதலின் மூலமாக மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்:

இன்றைக்கு ஆன்மீக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். காதலில் கற்பனையான தொடர்புகள் ஏற்படும். வணிகத்தில் ஆழ்மன முடிவுகளை செயல்படுத்தினால் வெற்றி கிடைக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *