வீல் சேரில் ரஜினிகாந்த்… தள்ளிக்கொண்டு வந்த ஐஸ்வர்யா! நடந்தது என்ன?
நடிகர் ரஜினிகாந்த் வீல் சேரில் அமர்ந்தபடியும், பின்னே அவரது மகள் ஐஸ்வர்யா தள்ளிக்கொண்டு வரும் புகைப்படத்தினை ரஜினிகாந்த் பதிவிட்டு தனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லால் சலாம்
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள திரைப்படம் தான் லால் சலாம்.
லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கதாநாயகர்களாகவும், நிரவ்ஷா, ஜீவிதா ராஜ்குமார், செந்தில், தன்யா பாலகிருஷ்ணன், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகிள்ளு இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் வாழ்த்து
லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில், ரசிகர்கள் ரஜினி படம் என்பது போன்றே கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்கள் ஆராவாரம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றார். தற்போது ரஜினிகாந்த் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளதுடன், வீல் சேரில் அமர்ந்துள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.