பெண்களை குறி வைத்து தாக்கும் குடல் உளைச்சல் நோய்- ஜாக்கிரதை!

பொதுவாக தற்போது இருக்கும் அவசர உலகில் வேலைகள் அனைத்தும் பரபரப்பாகவே சென்றுக் கொண்டிருக்கின்றன.

எங்கு பார்த்தாலும் பதற்றம், பரபரப்பு, அறிவியலின் வளர்ச்சி இப்படியான காரணங்களினால் மனிதர்களின் இயற்கையான வாழ்க்கை முறையை அடியோடு மாற்றி விடுகிறது.

இந்த வாழ்க்கை முறை ஆண்களை விட பெண்களை அதிகமாக பாதிப்பதாக கூறப்படுகின்றது. அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குடும்பம், வேலை என இரண்டையும் சரியாக ஒழுங்குப்படுத்த முடியாமல் மன உளைச்சல், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இது நாளடைவில் “குடல் உளைச்சல்” என்ற நோயை ஏற்படுத்துகின்றது.

அந்த வகையில் இந்த நோய் பெண்களை எந்தெந்த வகைகளில் தாக்குகின்றன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

குடல் உளைச்சல் நோயின் அறிகுறிகள்
1. சராசரியாக 70 சதவீதமான பெண்கள் குடல் உளைச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வேலைக்கு செல்லும் பெண்களை போல் வீட்டிலுள்ள பெண்களையும் அதிகம் பாதிக்கின்றது.

2. வயிற்றில் எரிச்சல், வலி, இரைச்சல், சாப்பிட்ட உடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை நாடுவது சிறந்தது.

3. சாப்பிட்ட பின்னர் நாளொன்றுக்கு 4 அல்லது 5 முறை மலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

4. மலம் கழித்தல், உணவுக்குழாய், நெஞ்சு ஆகியவற்றில் எரிச்சல், வயிறு உப்புசம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். இவற்றை சாதாரணம் என நினைத்து அப்படியே விடுவது நல்லதல்ல.

5. தொடர்ந்து அடி வயிற்றில் வலி இருந்தால் அதனை குடல்வால் நோய் என நினைத்து அறுவை சிகிச்சைகளை செய்து கொள்வார்கள். ஆனால் சிகிச்சைக்கு பின்னரும் வலி இருக்கும். ஆகையால் தெளிவான பரிசோதனைக்கு பின்னர் தீர்மானம் எடுத்து சிகிச்சை பெறுவது சிறந்தது.

6. வயிற்று பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளுன்கு “அமீபா” என்ற கிருமியின் தாக்குதல் தான் காரணம் என நினைத்து சிலர் மருந்துவில்லைகளை எடுத்து வருவார்கள். இவை அனைத்திற்கு உரிய மருத்துவரால் மாத்திரமே தீர்வளிக்க முடியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *