மகள் திருமணத்தில் ரோபோ சங்கர் செய்த செயல்: தம்பதிகள் முன் கையோங்கிய மனைவி- வீடியோ
மகள் திருமணத்தில் ரோபோ சங்கர் செய்த செயல் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.
ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவிலுள்ள நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ரோபோ சங்கர்.
இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான “மாரி” படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.
இப்படியொரு நிலையில் ரோபோ சங்கருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
திருமண அலப்பறைகள்
இந்த நிலையில் சினிமாவில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும் குடும்பமாக சேர்ந்து சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் செய்ய போவதாக அவரே கூறி வந்த நிலையில், மாமன் கார்த்திக் உடன் நிச்சயதார்த்தம் பெரியோர்கள் முன்னிலையில் சென்னையில் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தம்பதிகள் இணைந்து போட்டோக்கள் மற்றும் காணொளிகள் வெளியிட்டனர்.
அந்த வகையில் ஊஞ்சலில் ரோபோ சங்கர்- மனைவி அமர்ந்திருக்கும் பொழுது ரோபோ சங்கர், மனைவிக்கு மிக நெருக்கமாக வருகிறார். பிள்ளைகள் முன் கூச்சமான மனைவி கையோங்கி அடிக்க செல்கிறார்.
இந்த காணொளி தற்போது வெளியாகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.