அர்ச்சனாவின் உடையைப் பற்றி சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்! டைட்டில் வின்னர் எங்கிருக்கிறார்?
பிக் பாஸில் டைட்டில் வின்னரான அர்ச்சனா, கொடைக்கானலில் தனது வெக்கேஷனை கழித்துவரும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் அர்ச்சனா
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றிக் கோப்பையை தட்டித் தூக்கினார்.
பிக் பாஸ் வரலாற்றிலேயே இவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாராம். மேலும் எந்தவொரு வைல்டு கார்டு போட்டியாளரும் வெற்றி பெற்றதில்லை.
இவர் பிரபல ரிவியில் தொகுப்பாளராக வலம்வந்த நிலையில், பின்பு ராஜா ராணி 2 சீரியல் மூலம் வில்லியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
கொடைக்கானலில் அர்ச்சனா
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு குடும்பத்துடன் நேரம் செலவழித்து வரும் அர்ச்சனா அவ்வப்போது பேட்டியும் கொடுத்து வருவதுடன், சில நிகழ்ச்சிகளிலும் கலந்து வருகின்றார்.
தொடர்ந்து கோடை காலத்தை கொடைக்கானலில் கழித்து வருகின்றார். காலர் வைத்த வித்தியாசமான பேண்ட் ரசிகர்களால் அதிகம் கவனம் பெற்று வருகின்றது.
இவரது புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் குறிப்பாக உடையைக் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.