75 ஆண்டுகளில் இல்லாத அளவு : விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!
தமிழகத்தின் தற்போது பருவமழை மொத்தமாகவே ஓய்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தின் இறுதியில் இருந்தே வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது, புவி வெப்பமயவதால் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடித்ததடுத்த மாதங்களில் இன்னும் வெயிலின் தாக்கம் இருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலக அளவில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய வானிலை அமைப்பு தற்போது தகவல் தெரிவித்துள்ளது.