ஊழல் நோயை விரட்ட அண்ணாமலை லேகியம் விற்கிறாரர் – கேபி ராமலிங்கம்!
மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு கவுன்சிலராக கூட போட்டியிட்டு வெற்றி பெறாதவர், தேர்தலில் நின்று வெற்றி பெற்றாதல்தான் பக்குவம் வரும், அண்ணாமலை லேகியம் விற்பனை செய்பவர் போல பேசுகிறார் என்றார்.நாங்க்ள பேச ஆரம்பித்தால், அண்ணாமலை வேட்டியை கழட்டிவிட்டுதான் ஓட வேண்டும் என்றும் கூறியிருந்தார்
ஆர்பி உதயகுமாரின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பாஜகவினர் ஆர்பி உதயகுமாருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கேபி ராமலிங்கம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அண்ணாமலை லேகியம் விற்பவர் தான். ஊழல் நோயை விரட்டும் லேகியத்தை விற்கிறார் என்றார். அண்ணாமலை ஊழல்வாதிகளை அண்ணாமலை ஒழிப்பார் என்றும் கூறினார். மேலும் ராமரை போல கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் பிரதமர் மோடி என்றும் போடி போன்ற ஒரு தலைவரை இளைய தலைமுறை பார்த்ததில்லை என்றும் கேபி ராமலிங்கம் தெரிவித்தார்.