காங்கிரஸ் அரசு வீணடித்த நிலக்கரியை பா.ஜ.க. அரசு வைரமாக்கியது : நிர்மலா சீதாராமன்..!

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றார். அதற்கு முன்னதாக இந்தியாவின் பொருளாதார நிலை, பிரதமர் மோடி பதவி ஏற்றபின் இந்தியாவின் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நேற்று அவர் மக்களவைவில் வெள்கை அறிக்கை தொடர்பாக பேசினார். அப்போது நீங்கள் ( ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யு.பி.ஏ.)- காங்கிரஸ் ஆட்சி காலத்தில்) நிலக்கரியை சாம்பலாக்கி விட்டீர்கள். நாங்கள் நிலக்கரியை வைரமாக்கியுள்ளோம். நிலக்கரி ஊழல் தொடர்பான சிஏஜி அறிக்கையில், இந்தியாவுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கடும் நெருக்கடியிலும் போராட்டத்திற்கு மத்தியிலும் வெள்ளை அறிக்கையை நாங்கள் வெளியிட்டுள்ளோம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த காமன்வெல்த் ஊழல்களை உலகமே அறியும்.

உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உங்களால் கையாள முடியவில்லை. அதை எப்படி கையாள வேண்டும் என்று இப்போது பாடம் எடுக்கிறார்கள். 2008 பொருளாதார நெருக்கடி கொரோனா நெருக்கடி காலம் போன்றது போல் தீவிரமாக இல்லை. காங்கிரஸ் அரசாங்கம் நேர்மையாக கையாண்டிருக்க வேண்டும். நாட்டின் நலனை பாதுகாக்க ஒன்றும் செய்யவில்லை. ஆனால் ஊழல் மேல் ஊழல் தொடர்ந்தது. இப்படி பட்ட சூழ்நிலையில்தான் ஆட்சியில் இருந்து வெளியேறினார்கள்” என்றார். மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *