இந்த வழித்தடத்தில் தான் அடுத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர் இரன்னா கடாடி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், புனே – பெலகாவி இடையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை விடப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வழித்தடத்தில் மின்மயமாக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இவை நிறைவு பெற்றதும் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள 14 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் 60 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே 2023 இல் 34 வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்திய ரயில்வே இந்த ஆண்டு கிட்டத்தட்ட 60 புதிய வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மும்பை சென்ட்ரல் – அகமதாபாத், புனே – பெலகாவி, பெங்களூரு – மங்களூரு, விசாகப்பட்டினம் – திருப்பதி, குருவாயூர் – ராமேஸ்வரம், டாடா நகர் – வாரணாசி, பிரயாக்ராஜ் – ஆக்ரா, லக்னோ – பாட்னா, ராய்ப்பூர் – வாரணாசி ஆகிய வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

வட மாநிலங்களில் 34 புதிய வழித்தடங்களிலும், தென்னிந்தியாவில் 25 புதிய ரயில்களிலும் புதிய வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது “2024 ஆம் ஆண்டில் வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்படும் சில வழித்தடங்களில் மும்பை முதல் ஷேகான், புனே முதல் ஷேகான், பெலகாவி முதல் புனே, ராய்பூர் முதல் வாரணாசி மற்றும் கொல்கத்தா-ரூர்கேலா ஆகியவை அடங்கும்” என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *