இது தெரியுமா ? தினமும் 6 பூண்டுகளை வறுத்துச் சாப்பிட்டு வந்தால்…

பூண்டுகள் நம் உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல் பார்த்துக்கொள்கின்றன,தினமும் 2 பூண்டினை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நிறைய நன்மைகளை தரும். ஆனால் நிறைய பேருக்கு பூண்டினை பச்சையாக சாப்பிடுவது பிடிக்காது. பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும். இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.

உடலுக்கு மாங்கனீசு சக்தி தேவை. உடலில் ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட இந்த சத்து அவசியம் தேவை. அன்றாட உடலுக்கு தேவையான மாங்கனீசு சக்தியில் பூண்டில் 3 கிராம் கிடைத்துவிடுகிறது. பூண்டில் இருக்கும் வைட்டமின் சி சத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

வைட்டமின் சி சத்து தான் உடலில் இரத்த நாளங்கள். தசைகள், எலும்புகளின் வலுவை உறுதி செய்கிறது. பூண்டில் இருக்கும் செலினியம் உடலில் நன்மை செய்யும் நொதிகளை தூண்டுகிறது.உடலில் இரும்புசத்து, ஜிங்க் போன்றவை சிறப்பாக இயங்க பூண்டு உதவுகிறது என்பதை உணவு குறித்த வேதியியல் இதழ் ஒன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வளரும் பிள்ளைகளுக்கு பூண்டில் சற்று கூடுதலாக வெண்ணெய் சேர்த்து கொடுங்கள். ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக இருக்கும்.

வறுத்த பூண்டு உடலுக்கு சென்ற சில மணி நேரத்தில் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. பிறகு கெட்ட கொழுப்புகளை கரைத்து அதை வெளியேற்றும் பணிகளில் விரைவாக செயல்படுகிறது.

பூண்டை எப்படிச் சாப்பிடுவது?

ஆறு பூண்டுகளை வறுத்துச் சாப்பிடுங்கள். இதன்மூலம் நம் உடலில் என்னவெல்லாம் நன்மைகள் என்று பாருங்கள்:

* சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், பூண்டு செரிமானமாகிவிடும்
* அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடங்கி, பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து உடல்நலத்தைக் காக்கும், புற்றுநோய் செல்களை அழிக்கும்
* அடுத்த இரண்டு மணி நேரத்தில், உடலின் வளர்சிதைமாற்றம் தூண்டப்படும், தேவையில்லாத நீர், கொழுப்பு குறையும்
* ஆறு முதல் ஏழு மணி நேரம் தாண்டியவுடன், பூண்டு இரத்த நாளங்களில் நுழையும், பேக்டீரியாக்களை எதிர்த்து உடாலுக்கு ஆரோக்கியம் தரும்
* அடுத்த ஒரு மணி நேரத்தில், பூண்டின் சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்ளும், இது சிறந்த பாதுகாப்பாகச் செயல்படும்
* அதன்பிறகுதான், பூண்டின் நிஜமான பெரிய பலன்கள் தெரியத்தொடங்கும், இதயம் சார்ந்த பல பிரச்னைகளைப் பூண்டு குணப்படுத்தி உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்புச்சக்தியைத் தரும், எலும்புகளை வலுவாக்கி, சோர்வைப் போக்கும்

சுருக்கமாகச் சொன்னால், நாள்முழுக்கச் சுறுசுறுப்போடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வதற்கு, தினமும் ஆறே ஆறு வறுத்த பூண்டுகள் போதும்.

10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 பற்கள், 40 வயதை அடைந்தவர்கள் தினமும் 6 பற்கள் பூண்டை சாப்பிட்டு வரலாம். இதனால் உடல் வலுபெறும். வாயு ஏற்படாது. வாயு பிரச்சனை உண்டாகாது. உடலில் தேவையற்ற கொழுப்புகளால் உடல் எடை அதிகரிக் காது. கொழுப்பு கட்டியை கரைத்து உடல் எடையையும் குறைக்கும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் வறுத்தபூண்டை மசித்து நாவில் தடவி விடலாம்.

வறுத்த பூண்டால் இவ்வளவு பயன் அதுவும் வாடை இல்லாமல் கிடைக்கும் போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். அதே நேரம் அளவுக்கு அதிகமாக பலன் தருகிறதே என்று 6 க்கு மேல் சாப்பிடவும் வேண்டாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டுக்கும் பொருந்தும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *