கார் வாங்க பிளான் இருக்க..? 2 மாடல்களுக்கு சூப்பர் தள்ளுபடியை அறிவித்த ஹோண்டா
2024 பிப்ரவரி மாதத்தில் அற்புதமான சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் பெனிஃபிட்ஸ்களை ஹோண்டா கார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாத இறுதி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளின்படி தங்களது காரை வாங்க விரும்புவோருக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் சேமிக்கும் வாய்ப்பை ஹோண்டா கார்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
பிப்ரவரி மாத சலுகையில் ஹோண்டா நிறுவனம் அமேஸ் மற்றும் சிட்டி ஆகிய இரண்டு கார் மாடல்களுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது. எனினும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எலிவேட் எஸ்யூவி மற்றும் சிட்டி காரின் ஹைப்ரிட் வெர்ஷன் ஆகியவை இந்த பிப்ரவரி மாத சலுகை பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
பிப்ரவரி மாத சலுகையில் ஹோண்டா நிறுவனம் அமேஸ் மற்றும் சிட்டி ஆகிய இரண்டு கார் மாடல்களுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது. எனினும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எலிவேட் எஸ்யூவி மற்றும் சிட்டி காரின் ஹைப்ரிட் வெர்ஷன் ஆகியவை இந்த பிப்ரவரி மாத சலுகை பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
மேலும், இந்த மாடல்கள் ரூ.15,000 வரை கார் எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறுகின்றன. மேலும் ரூ.4,000 மதிப்புள்ள கஸ்டமர் லாயல்டி போனஸ், ரூ.6,000 மதிப்புள்ள கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.5,000 மதிப்புள்ள கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.20,000 மதிப்புள்ள ஸ்பெஷல் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்போன்ற சலுகைகளுடன் ஹோண்டா ஃபிளாட் டிஸ்கவுண்ட்ஸ்களையும் வழங்குகிறது. அதே போல ஜனவரி அல்லது அதற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட சிட்டி செடான்களுக்கு, ரூ.15,000 வரை கேஷ் டிஸ்கவுண்ட் அல்லது ரூ.16,296 மதிப்புள்ள ஃப்ரீ ஆக்சஸரீஸ்களை ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது. மேலும் ரூ.10,000 மதிப்புள்ள கார் எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுகிறது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகைகளின் கீழ் குறிப்பிடத்தக்க பலன்களையும் வழங்குகிறது. செடானின் VX மற்றும் ZX வேரியன்ட்ஸ்களுக்கு இவை பொருந்தும். நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டுகளுக்கான வாரன்டியை எடுப்பதற்கு ரூ.13,651 மதிப்பிலான ஊக்கத்தொகையை ஹோண்டா வழங்குகிறது. தவிர சிட்டி மாடலின் எலிகன்ட் எடிஷனைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.36,500 மதிப்புள்ள ஸ்பெஷல் எடிஷன் பெனிஃபிட்டையும் ஹோண்டா அறிவித்துள்ளது.
இவை தவிர கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட Amaze மாடல்களுக்கு ரூ.36,346 வரை தள்ளுபடியை ஹோண்டா வழங்குகிறது. ஜனவரிக்கு முன் தயாரிக்கப்பட்ட அனைத்து மாடல்களின் S வேரியன்ட்ட்டிற்கும் ரூ.30,000 மதிப்புள்ள கேஷ் டிஸ்கவுண்ட் அல்லது ரூ.36,346 மதிப்புள்ள ஃப்ரீ அக்சஸரீஸ் கிடைக்கும். E வேரியன்ட்டானது ரூ.12, 349 மதிப்பிலான இலவச ஆக்சஸரீஸ் அல்லது ரூ.10,000 கேஷ் டிஸ்கவுண்ட்டை பெறுகிறது. அதே நேரம் VX வேரியன்ட் மற்றும் எலைட் எடிஷனுக்கு ரூ.20,000 கேஷ் டிஸ்கவுண்ட் அல்லது ரூ.24,346 மதிப்பிலான ஃப்ரீ ஆக்சஸரீஸ் கிடைக்கும்.
இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட Amaze-ன் S வேரியன்ட்டிற்கு ரூ.20,000 வரை கேஷ் டிஸ்கவுண்ட் அல்லது ரூ.24,346 மதிப்புள்ள இலவச ஆக்சஸரீஸ் கிடைக்கும். செடானின் மற்ற அனைத்து வேரியன்ட்ஸ்களுக்கும் ரூ.10,000 கேஷ் டிஸ்கவுண்ட் அல்லது ரூ.12,349 ஃப்ரீ ஆக்சஸரீஸ் கிடைக்கும். அதே போல் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட Amaze மாடலுக்கு, ரூ.10,000 மதிப்புள்ள கார் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை நிறுவனம் வழங்குகிறது. இதன் எலைட் எடிஷன் ரூ.10,000 மதிப்புள்ள கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.30,000 வரை மதிப்புள்ள ஸ்பெஷல் எடிஷன் டிஸ்கவுண்ட்டை பெறுகிறது.