வெறும் 50 பைசா செலவில் 150 கி.மீ. மைலேஜ் தரும் அட்டகாசமான பைக்… குவியும் பாராட்டு

இந்தியாவில் அனைவரும் பைக் வைத்திருக்கிறார்கள். பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய கவலை பெட்ரோல் செலவு தான். ஆனால் இந்த சுமையை போக்கும் வகையில் ஒரு அட்டகாசமான பைக் வந்துள்ளது. எல்பிஜி கேஸ் சிலிண்டர் வீட்டு சமையலுக்கு உபயோகப்படுகிறது. இதனை பயன்படுத்தி ஆம்னி வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், பைக் சிலிண்டரால் இயக்கப்படுகிறது. பைக்கின் பின்புறத்தில் உள்ள பெட்டியில் 2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிலிண்டரில் இருந்து வெளியேறும் பைக் ன்ஜின் உட்புறம் சென்றடைகிறது. இதன் மூலம் சிலிண்டர் கேஸால் பைக் இயங்கும்.

எரிவாயு மூலம் இயங்கும் இந்த பைக் முழு டேங்கில் 150 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என வீடியோவில் கூறப்பட்டுள்ளது. அதாவது 2 கிலோ சிலிண்டரால் இந்த பைக் 150 கிலோமீட்டர் வரை செல்லும். கேஸ் மூலம் பைக்கை இயக்குவதற்கு கிலோமீட்டருக்கு 50-60 பைசா மட்டுமே செலவு ஆகும். ஆனால் பெட்ரோல் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2 – 3 ரூபாய் வரை செலவு ஆகும்.

கேஸ் பைக்கை ஓட்ட முடியுமா?

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், ஆர்டிஓவால் சான்றளிக்கப்பட்ட வாகனங்களில் மாற்றங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பைக்கின் இன்ஜின், பெட்ரோல் பம்ப் அல்லது என்ஜின் சிஸ்டத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், அதற்கு முன் உள்ளூர் ஆர்டிஓவிடம் அனுமதி பெற வேண்டும். ஆர்டிஓவிடம் அனுமதி பெற்ற பின்னரே திருத்தம் சட்டப்பூர்வமாக கருதப்படும். மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், பழைய BS-3 இன்ஜின் கொண்ட இருசக்கர வாகனங்களில் மட்டுமே CNG கிட் நிறுவ அனுமதிக்கப்படுகிறது.

விரைவில் கேஸ் பைக்?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், விரைவில் சிஎன்ஜியில் இயங்கும் மோட்டார் சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் சிஎன்ஜியில் இயங்கும் பைக்கின் வடிவமைப்பு வடிவத்தையும் வெளியிட்டது. இதன் மூலம் விரைவில் கேஸால் இயங்கும் வாகனம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *