Vande Bharat Train: கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் முக்கிய வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னை – கோவை, சென்னை – நெல்லை, சென்னை – மைசூரு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தென்னக ரயில்வே சார்பில் கோவை-பெங்களூரு இடையே வருகிற டிச.30ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைக்க உள்ளாா்.

இந்த நிலையில், கோவை – பெங்களூரூ இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூருக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு காலை 11.30 மணியளவில் சென்றடைந்தது.

மீண்டும் பிற்பகல் 1.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் ரயில் கோவைக்கு இரவு 8 மணியளவில் வந்தடையும். இந்த வந்தே பாரத் ரயிலில் ஒரு சொகுசுப் பெட்டி, 7 சாதாரணப் பெட்டிகள் என மொத்தம் 8 பெட்டிகள் அடங்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *