AI-க்கு பாடம் எடுக்கும் 53 வயது பெண்.. நல்ல வருமானம் கிடைக்குதாம்..!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் வந்துவிட்டது. அனைவரும் நம் அன்றாட வாழ்க்கையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த துறைக்கான எதிர்காலமும் சிறப்பாக இருப்பதாகவே தெரிகிறது. தற்போது AI மூலம் வருவாய் ஈட்டுவது தான் விவாதப் பொருளாகியுள்ளது.

எந்த ஒரு தயாரிப்பும் மக்களுக்கு புரியும் மொழியில் இருந்தால் மட்டுமே அவர்களிடம் சரியாக சென்றடையும். எனவே தான் முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைத்த தொழில்நுட்பங்களை உள்ளூர் மொழியிலும் வழங்குவதில் நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன. இதன் மூலம் அவர்களின் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர் , வருவாயும் அதிகமாகும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில், அதனை உள்ளூர் மொழிகளுக்கு ஏற்ப பயிற்சி அளித்து மக்களிடம் சென்று சேர்க்க பெரு நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. அப்படி தங்களின் லாங்குவேஜ் மாடல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு இந்திய மொழிகளில் பயிற்சி அளித்து வருகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

மொழி திறன் மூலம் வருவாய்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிளாக்கில் வெளியிட்டுள்ள கட்டுரையில் மொழி பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளது. சாமானிய மக்களை கொண்டு பயிற்சி அளித்து அவர்களுக்கும் ஒரு வருவாய் வாய்ப்பை ஏற்படுத்து தருகிறது மைக்ரோசாப்ட்.

தங்கள் லாங்குவேஜ் மாடலுக்கு பயிற்சி அளித்து மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஒரு பெண் எப்படி வருவாய் ஈட்டுகிறார் என அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

AIக்கு பயிற்சி அளிக்கும் பெண்: மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவை சேர்ந்த 53 வயதான பேபி ராஜாராம் போக்லே மைக்ரோசாஃப்டின் AI கருவிகளுக்கு மராத்தியில் பாடம் எடுத்து ஒரு மணி நேரத்திற்கு 400 ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்.

சுயதொழில் செய்துவரும் இவர், தனது அன்றாட பணிகளை முடித்து விட்டு நாள்தோறும் ஒரு மணி நேரம் இதற்காக செலவிடுகிறார். தன்னுடைய மொழி திறனை பயன்படுத்தி 11 நாட்களில் 2,000 ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கிறார்.

மைக்ரோசாப்டின் செயலியை திறந்து , அவர்கள் தந்துள்ள கட்டுரை அல்லதுகதையை வாய்ஸ் ரெக்கார்டு செய்கிறார். சரியான மொழி உச்சரிப்பு, எங்கு குரலை உயர்த்த வேண்டும், அழுத்தம் தர வேண்டும் என்பதற்கு ஏற்ப வாய்ஸ் ரெக்கார்டு செய்கிறார்.

இதனை பயிற்சியாக கொண்டு AI செயல்பட போகிறது என்பது தனக்கு பெருமையாக உள்ளதென கூறுகிறார். இதனால் மூலம் சம்பாதிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதாக தெரிவிக்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *