பாலிவுட் பக்கம் ரொம்ப விமர்சனம்! வேதனையில் உண்மையை உளறிய மிருணால் தாக்கூர்!

முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை மிருணால் தாக்கூர். இவர் சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ஆனார்.

 

அந்த படத்திற்கு பிறகு பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து கொண்டு வருகிறார். இருப்பினும், நடிகை மிருணால் தாக்கூர் நடிக்க நுழைந்த ஆரம்ப காலத்தில் சந்தித்த பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளார்.

அதிலும் குறிப்பாக மிருணால் தாக்கூர் உடல்கேலிக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பாலிவுட்டில் நடிக்கும் போது நான் சில சிரமங்களை சந்தித்தேன்.

குறிப்பாக உடல் கேலி குறித்து சிலர் கூறும் கருத்துகளால் தான் இந்தி படங்களில் இருந்து என்னை ஒதுக்கி வைத்தது. நான் அழகாக இருந்தாலும், மற்ற ஹீரோயின்களுடன் ஒப்பிட்டு, தன் உடல் கவர்ச்சியாக இல்லை என்று விமர்சித்து இருக்கிறார்கள்.

அப்டி அவர்கள் சொல்வது எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. நடிப்பதை மட்டும் பற்றி பேசினால் நன்றாக இருக்கும். ஆனால், சிலர் உடல் அமைப்பை வைத்து கேலி செய்வது பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. எனவே, நான் கொஞ்சம் உடல் எடை அதிகமாக இருப்பதாகவும், கவர்ச்சியாக இல்லை என்று விமர்சிப்பது பிடிக்கவில்லை .

கண்டிப்பாக நான் அதையெல்லாம் பற்றி கவலை படப்போவது இல்லை. ஏனென்றால், என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது தான். தேவைப்பட்டால் படங்களில் அம்மா, சகோதரி வேடங்களில் நடிக்கவும் தயங்கமாட்டேன்” எனவும் மிருணால் தாக்கூர் கூறியுள்ளார். மேலும், நடிகை மிருணால் தாக்கூர் அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பேம்லி ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *