Lal Salaam Ticket Booking: சனிக்கிழமை லால் சலாம் டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு?.. தேறுமா? தேறாதா?
சென்னை: லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் லால் சலாம் மற்றும் வேட்டையன் என இரு படங்களில் கமிட் ஆனார். மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன கதையை கேட்டதும் ரொம்பவே பிடித்துப்போய் விட்ட நிலையில், தானே நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டு மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
பிப்ரவரி 9ம் தேதி லால் சலாம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. ஆனால், இந்த படம் ரஜினிகாந்தின் நேரடிப்படம் என இல்லாத நிலையில், இதில், கேமியோ ரோலில் தான் அவர் நடித்துள்ளார் என நினைத்த ரசிகர்கள் ஜெயிலர் படம் முதல் நாளுக்கு கொடுத்த வரவேற்பை ரசிகர்கள் இந்த படத்துக்கு கொடுக்கவில்லை.
ஜெயிலர் வசூல்: கடந்த ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் 98 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. அந்த படம் ஒட்டுமொத்தமாக 600 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. அதற்கு முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த, தர்பார் படங்களும் சரியாக ஓடவில்லை என்றாலும் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தின.
விக்ராந்த் அப்பா கதாபாத்திரம்: லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் விக்ராந்துக்கு அப்பாவாக மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் படத்தில் ஒரு அங்கமாகவே வந்து செல்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் வந்தததும் தான் படம் பெரியளவில் எதிர்பார்ப்பை பெற்றது. ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு வெளியாகும் என தள்ளிப் போடப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் படங்களுடன் மோதாமல் பிப்ரவரி 9ம் தேதி வெளியானது.