Karthigai Deebam: தீபாவுக்கு எதிராக நடந்த சதி.. கடைசி நேரத்தில் கேமை மாற்றிய கார்த்திக்! – கா., தீபம் அப்டேட்!

மிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்திகை தீபம்.

 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவின் கச்சேரி குறித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஓட்டினான். அதை பார்த்து தர்மலிங்கம் ஆனந்த கண்ணீர் விட்டு நன்றி கூறிய நிலையில், இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்!

போஸ்டரை பார்த்து கடுப்பாகும் ரூபாஸ்ரீ, இந்த தீபாவை பாடவே விட கூடாது என முடிவு செய்கிறாள். இதனையடுத்து நேராக போலீசை கூப்பிட்டு கொண்டு, இவர்கள் பொண்ணை பாட வைப்பதாக சொல்லி 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கி இருக்காங்க, அதை கொடுத்தா தான் கச்சேரி நடக்கணும் என்று சொல்கிறாள்.

இவர்கள் எதிர்பாராத ட்விஸ்ட்டாக தர்மலிங்கம் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து இவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தாச்சு, அதை வாங்கிட்டோம்னு எழுதி கொடுக்க சொல்லுங்க என்று செக்மேட் வைக்கிறார். போலீஸ் இருப்பதால் வேறு வழியின்று அவர்கள் எழுதி கொடுத்து விட்டு வெளியேறுகின்றனர்.

அடுத்து தீபா பணம் எப்படி வந்தது என்று கேட்க கார்த்திக் மாப்ள தான் இப்படியெல்லாம் பிரச்சினை நடக்க வாய்ப்பிருக்குனு சொல்லி பணத்தை கொடுத்தாரு என்று சொல்கிறார்.

அடுத்ததாக இங்கே எல்லாரும் சாப்பிட உட்கார, தீபா பரிமாற, அபிராமிக்கு சாப்பாடு வைக்க போகும் போது அவள் நானே பரிமாறிக்கிறேன் என்று சொல்கிறாள். இந்த நிலையில், தீபாவுக்கு கல்யாண வீட்டில் வைத்து அபிராமி சொன்ன வாரத்தை நினைவுக்கு வருகிறது.

இதனிடையே திடீரென ஐஸ்வர்யா வாந்தி எடுத்து மயங்கி விழ, டாக்டர் வந்து பரிசோதனை செய்து விட்டு மூன்று மாதம் கர்ப்பம் என்று சொல்கிறார். இதைக்கேட்டு எல்லாரும் சந்தோசப்படுகின்றனர்.

இந்த நேரம் பார்த்து ஐஸ்வர்யாவின் அம்மா வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க, அபிராமி நீங்க வந்த நேரம் என்று ஐஸ்வர்யா கர்ப்பம் என்று சொல்லி சந்தோசப்படுகிறார்.

இதனையடுத்து ஐஸ்வர்யாவும் அவளது அம்மாவும் பேசும் போது, இது அனைத்தும் டிராமா என்பது தெரிய வருகிறது.

கார்த்திக்கும் தீபாவும் ரூமுக்குள் இருக்கும் போது, கார்த்திக் நீ பாடுறதுல மட்டும் கவனத்தை செலுத்துங்க என்று சொல்கிறான்.

இந்த நிலையில், தீபா ஒரு காதல் பாடலை கார்த்திக்காக பாட, இந்த நேரத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் அபிராமி டிஸ்டர்ப் ஆகிறாள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *