Madurai Thanni Chutney: இட்லிக்கு சைடு டிஷ்ஷா.. மதுரை தண்ணி சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
Madurai Thanni Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லிக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா?
சற்று வித்தியாசமான அதே சமயம் சிம்பிளாக மற்றும் ஈஸியாக செய்யக்கூடியவாறான ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மதுரை தண்ணி சட்னியை செய்யுங்கள்.
இந்த தண்ணி சட்னி இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி பார்க்க தேங்காய் சட்னி போன்று காணப்பட்டாலும், இதில் தேங்காய் சேர்க்க தேவையில்லை. ஆனால் சுவையோ தேங்காய் சட்னி போன்று தான் இருக்கும்.
மதுரையின் ரோட்டுக்கடைகளில் இந்த மாதிரியான சட்னியைத் தான் இட்லிக்கு பரிமாறுவார்கள். இந்த சட்னியானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு மதுரை தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* இஞ்சி – 1 இன்ச் (நறுக்கியது)
* பூண்டு – 2 பல்
* பச்சை மிளகாய் – 3
* வெங்காயம் – 2 (நறுக்கியது)
* பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் – சிறிது (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் – 1 (விதைகளை நீக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்துநஙனகு சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் பொட்டுக்கடலை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பிறகு சட்னி நீர் போன்று இருக்க, நீரை கொஞ்சம் அதிகம் ஊற்றி, கலந்து கொள்ள வேண்டும்.